தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

 

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் பரவி வருகிறது. முன்னதாக ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரையிலேயே இருந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது இரு மடங்காக பரவி வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில், எந்தெந்த பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்றும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அதாவது, சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 316 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.