21 வருடங்களுக்கு முன்பு ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இன்றும் கடைபிடித்து வருகிறாராம் அஜித்! அது என்ன?

 

21 வருடங்களுக்கு முன்பு ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இன்றும் கடைபிடித்து வருகிறாராம் அஜித்! அது என்ன?

தமிழ் சினிமாவைப்  பொறுத்தவரை அஜித் மற்றும் ஷாலினி ஜோடி உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர். கோலிவுட்டின் மிகச் சிறந்த ஜோடியாக கருதப்படும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும், தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். 

நாளை காதலர் தினத்தை கொண்டாட உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் காதலிகளை எவ்வாறு ஆச்சர்யப்படுத்தலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கின்றனர். 

தமிழ் சினிமாவைப்  பொறுத்தவரை அஜித் மற்றும் ஷாலினி ஜோடி உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.கோலிவுட்டின் மிகச் சிறந்த ஜோடியாக கருதப்படும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும்,தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்திருக்கின்றனர். 

‘அமர்க்களம்’ படத்தின் போது இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். பின்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.  இப்போது, இவர்களைப் பற்றி ஒரு ருசிகரமான தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, அஜித் 21 ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவி ஷாலினிக்கு அளித்த வாக்குறுதியை இன்றும் நிறைவேற்றி வருகிறார்.

amarikalam

இருவரும் காதலித்து கொண்டிருந்த போது ஷாலினி அஜித்திடம் ஒரு சத்தியம் வாங்கியுள்ளார். “திருமணத்திற்குப் பிறகு, ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் ஒருபோதும் நடிக்க கூடாது, ஒரு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே படங்களில் நடிக்க வேண்டும். ஒரு மாதத்தில் குறைந்தது 15 நாட்களாவது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும்” என்பது தான் அந்த சத்தியம்.

ajith-shalini.jpg1

சில வருடங்களுக்கு முன்பு அஜித் கலந்துகொண்ட நேர்காணலில் இந்த உண்மையை பகிர்ந்து கொண்டார். 21 ஆண்டுகளுக்குப் பிறகும், அஜித் தனது வார்த்தையைக் கடைப்பிடித்து வருகிறாராம்.படப்பிடிப்புக்கு வரும்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதையும் நாம் காணலாம்.அதே போல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமிட் ஆவதில்லை.இவ்வாறு நடந்து தன் மனைவியின் ஆசையை இன்றளவும் பாதுகாத்து வருவது அனைவர் மத்தியிலும் பாராட்டப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.