21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி!

 

21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி!

21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: 21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்று கூறிய ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை என்றும்  ஏற்கெனவே அறிவித்திருந்தார். மேலும் என்னுடைய படங்களையும் இயக்கக் கொடியை எவரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையே என் இலக்கு என்று தெரிவித்திருந்த ரஜினிகாந்த், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தண்ணீர்ப் பிரச்சினையை எந்தக் கட்சி தீர்ப்பதாகச் சொல்கிறதோ அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில்  நடிகர் ரஜினியிடம், தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் கட்சி என்று மாநிலக் கட்சியைச் சொல்கிறீர்களா, தேசியக் கட்சியைச் சொல்லுகிறீர்களா என்று கேட்டதற்கு, ‘இரண்டும்தான். மத்திய, மாநிலக் கட்சிகளைத்தான் சொல்கிறேன்’ என்றார். தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேதல்தான் இலக்கு என்றீர்கள். இப்போது 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில், 21 தொகுதிகளிலும் உங்கள் கட்சியில் வேட்பாளர்கள் நிறுத்துவீர்களா?’ என்று கேட்தற்கு 
‘இல்லை’ என்று பதிலளித்தார். 

முன்னதாக மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே சமயம் மக்களவை தேர்தல் தேதியுடன் தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதியும்   அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.