Home அரசியல் 21 ஆண்டுகளுக்கு பிறகு பாமகவில் திடீர் திருப்பம்... துள்ளிக் குதிக்கும் ராமதாஸ்..!

21 ஆண்டுகளுக்கு பிறகு பாமகவில் திடீர் திருப்பம்… துள்ளிக் குதிக்கும் ராமதாஸ்..!

21 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை பிரித்த காலம் மீண்டும் ஒன்று சேர்த்துவிட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு பாமகவில் திடீர் திருப்பம்... துள்ளிக் குதிக்கும் ராமதாஸ்..!

21 ஆண்டுகளுக்கு பிறகு, பாமக முன்னாள் தலைவர் தீரன் மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 

பாமகவில் தலைவராக இருந்தவர் பேராசிரியர் தீரன். சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். அவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாளராகச் செயல்பட்டதாகவும், தொலைக்காட்சி விவாதங்களில் தினகரன் பற்றி விமர்சிக்காமல் மென்மையான போக்கைக் கடைபிடித்து வந்ததாகவும், இதனால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேராராசியர் தீரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்தனர். சுமார் 6 மாத காலம் பேராசிரியர் தீரன் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்து வந்தார்.

 Ramadoss

இந்நிலையில் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். பாமகவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் தீரன் உள்ளிட்ட பலர் விரைவில் பாமகவிற்குத் திரும்புகின்றனர் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், பேராசிரியர் தீரன் மீண்டும் இணைந்துள்ளார். 

வன்னியர்சங்கம் தொடங்கிய காலம் முதல் பாமகவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் பேராசிரியர் தீரன் என்றும், 21 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை பிரித்த காலம் மீண்டும் ஒன்று சேர்த்துவிட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  பேராசிரியர் தீரன் கூறுகையில், நான் பணியாற்ற வேண்டிய இடம் பாமக தான் என்பதை உணர்ந்து கட்சியில் இணைந்துள்ளேன். அன்புமணியை முதல்வராக்குவோம் என்ற லட்சியத்துடன் என் செயல்பாடுகள் இருக்கும் என்றார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு பாமகவில் திடீர் திருப்பம்... துள்ளிக் குதிக்கும் ராமதாஸ்..!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர்...

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக்...

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. நடந்து...
- Advertisment -
TopTamilNews