21ம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக எடப்பாடி பழனிசாமி அரசு! – டி.டி.வி.தினகரன் தாக்கு

 

21ம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக எடப்பாடி பழனிசாமி அரசு! – டி.டி.வி.தினகரன் தாக்கு

மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் பிடில் வாசிக்கும் 21ம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக தமிழக ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.

மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் பிடில் வாசிக்கும் 21ம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக தமிழக ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரண்டாவது அறிக்கையில், “கொரொனா பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், மதுக்கடைகளைத் திறப்பதில் பழனிசாமி அரசு தீவிரம் காட்டுவது அவர்களின் நிதிச் சுமையை சாமனிய அப்பாவி மக்களின் தலையில் ஏற்றிவைக்கும் விபரீதத்தில் போய் முடிந்துவிடும். எனவே, வீண் பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்தில் நாளை மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தனது திறனில்லாத நிர்வாகத்தால் கொரோனா நோய் பரப்பும் இடமாக கோயம்பேடு சந்தையை மாற்றிய பழனிசாமி அரசு, அடுத்ததாக மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளது. இதற்காக உளவியல் ரீதியாக அனைவரையும் தயார்படுத்துவதற்காகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெளிப்படையான எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக மக்களை எளிதாக நடமாட அனுமதித்து வருகிறார்கள்.

lockdown-violation-78

டீக்கடைகள் கூட திறக்கக் கூடாது என்பவர்கள் மதுக்கடைகளைத் திறக்கத் துடிப்பதன் மூலம், 43 நாட்கள் மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தாலும், அரசாங்கத்தால் மதுக்கடைகளைத் திறக்காமல் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது.
அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறந்திருப்பதால் தமிழகத்தின் எல்லையோர மாவட்ட மக்கள் அங்கே சென்று மது வாங்குகிறார்கள் என்று பழனிசாமி அரசின் சில அமைச்சர்கள் தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்தி வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு கடும் பாதுகாப்பை மீறி மக்கள் எல்லை தாண்டிப் போக முடியுமா? அல்லது அவர்களை அரசே எல்லை தாண்ட அனுமதித்து தங்களின் மதுக்கடை திறப்பு முடிவுக்கு ஒரு காரணமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறதா?

crowd-in-liquor-shops

சென்னை மாநகர காவல் எல்லையைத் தவிர்த்து சுற்றுப்புறங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மதுக்கடைகளைத் திறக்க பழனிசாமி அரசு முடிவு செய்திருக்கிறது. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருப்பதால் எல்லையோர மாவட்ட மக்கள் அங்கே சென்று மதுவை வாங்கமுடியுமானால், சென்னை வாசிகள் அருகிலுள்ள மாவட்ட எல்லைகளை தாண்டிச்சென்று மதுவை வாங்க முடியாதா? அப்படி வாங்கினால் அதையும் திட்டமிட்டே அனுமதித்து பழனிசாமி அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?

edapaadi-palanisamy

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோள்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், ‘மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் பிடில் வாசிக்கும் 21 ஆம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக’ தமிழக ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 
கொரோனா பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில்,மதுக்கடைகளைத் திறப்பதில் தீவிரம் காட்டுவது விபரீதத்தில் போய் முடிந்துவிடும்.எனவே வீண் பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்தில் நாளை மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.