எகிற நினைத்த மா.செ.க்கள் -ஒதுங்கிக்கொண்ட இபிஎஸ்

 

எகிற நினைத்த மா.செ.க்கள் -ஒதுங்கிக்கொண்ட இபிஎஸ்

அதிமுகவினருடன் தொடர்ந்து பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு சசிகலா டென்ஷன் படுத்தி வருவதால் அவருக்கு எதிராக மாவட்டம் தோறும் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் கூட்டம் நடத்தி சசிகலாவை கண்டித்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் சில மாவட்டங்களில் இன்னமும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

எகிற நினைத்த மா.செ.க்கள் -ஒதுங்கிக்கொண்ட இபிஎஸ்

இது குறித்து மா.செ.க்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதேநேரம் சசிகலாவிடம் பேசுபவர்கள் அதிமுக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். அரியலூர் முன்னாள் மா.செ.வும், முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன், முன்னாள் எம்ஜிஆர் மன்ற செயலாளர் நரசிம்மன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் எடப்பாடி ஏரியாவான சேலம் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் சசிகலாவுடன் பேசி உள்ளனர். அவர்களை இன்னமும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை விட்டு நீக்காமல் உள்ளார்.

எகிற நினைத்த மா.செ.க்கள் -ஒதுங்கிக்கொண்ட இபிஎஸ்

சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வில்லை என்று மா.செக்களிடம் எடப்பாடி கேட்டால், பதிலுக்கு அந்த 20க்கும் மேற்பட்டவர்களை ஏன் நீங்கள் இன்னமும் கட்சியை விட்டு நீக்கவில்லை என்று கேட்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள். இதை தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி நேற்றைக்கு தலைமை கழகத்தில் நடந்த மா.செக்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து எதுவுமே பேசவில்லையாம்.

அதுமட்டுமல்ல சசிகலா பேச்சை எடுத்தாலே இது பற்றிய பேச்சு எழுந்து விடும் என்பதால் சசிகலாவுக்கு எதிராக மாவட்டம்தோறும் கண்டன தீர்மானம் நடத்த வேண்டும் என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாமி தலைமை கழகத்தில் நடந்த மா.செக்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்ற வில்லையாம்.