Home உலகம் இலங்கையில் கொரோனாவுக்கு 20 வது நபர் பலி!

இலங்கையில் கொரோனாவுக்கு 20 வது நபர் பலி!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 698 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 32 லட்சத்து 52 ஆயிரத்து 218 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 93 ஆயிரத்து 909 பேர்.  

கொரோனா பரவல் தொடங்கியதுமே முன்னெச்சரிக்கையோடு கையாண்ட நாடுகளில் நியூசிலாந்து, இலங்கை போன்றவற்றைச் சொல்லலாம். இலங்கையில் தொடக்கம் முதலே கடுமையான லாக்டெளன் பின்பற்ற பட்டு கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டது.

ஆனால், சமீப சில வாரங்களாக இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொழும்பில் முக்கியமான சந்தையே இதனால் மூடப்பட்டது. இலங்கையில் சினிமா தியேட்டர்கள் 15 நாட்களாக இயங்க வில்லை.

 இதுவரையில் இலங்கையில் கொரோனா மொத்த தொற்று 10,424 பேர். அதில் இதுவரை 19 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.  இன்று கொழும்பு மருத்துவமனையில் ஒரு பெண் கொரோனாவுக்குப் பலியாகியிருக்கிறார். அதன்மூலம் இலங்கையில் கொரோனா மரணம் 20 ஆக அதிகரித்து விட்டது.

இலங்கையில் நோய்த் தொற்றுள்ள பல இடங்களில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு மேலும் அது பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. கொரோனா நோய்த் தடுப்பு பணிகளில் புதிய செயலியை நேற்று இலங்கை அரசு சார்ப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மீண்டும் பொதுமுடக்கமா? தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஆலோசனை!

நவம்பர் மாதத்திற்கு அங்கு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில்...

“காட்டுக்குள் கடத்தி ,14 நாட்கள் அடைத்து …”கல்யாணத்திற்கு போன பெண் கதறல் .

ஒரு உறவினரின் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்ற பெண்ணை கடத்தி ஒரு காட்டுக்குள் அடைத்து 14 நாட்கள் பலாத்காரம் செய்தவரை போலீஸ் கைது...

பெரியார் பேரனுக்கு கொலைமிரட்டல்; இந்து பாரத் சேனா பிரமுகர் கைது

இந்து பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் மனோகரன். கோவை கள்ளப்பாளையத்தை சேர்ந்த இவர் தனது வாட்ஸ் அப் குழுவில் பெரியாருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழை நீரில் தத்தளிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் கடந்த சில நாட்களாக தமிழகத்தை புரட்டி போட்டு...
Do NOT follow this link or you will be banned from the site!