Home சினிமா சண்டை அரை மணிநேரம்... பஞ்சாயத்து ரெண்டு மணிநேரம்! பிக்பாஸ் 20-ம் நாள்

சண்டை அரை மணிநேரம்… பஞ்சாயத்து ரெண்டு மணிநேரம்! பிக்பாஸ் 20-ம் நாள்

பஞ்சாயத்து தலைவர் கமல்ஹாசன் வரும் சனிக்கிழமை எப்பிசோட். அதை எதிர்பார்க்கும் போட்டியாளர்கள், சில விஷயங்களை ஊதி அணைப்பதும்,, சிலவற்றை ஊதி பெருக்குவதமாகச் செய்வதே கமல் பாணி (பணி என்றும் சொல்லலாம்) இன்றைக்கும் பல சுவாரஸ்யங்கள் காத்திருந்தன. நாற்காலி வேண்டாம் என்று தனித்து நின்றார் கமல் (டபிள் மீனிங் தான் பாஸ்)

வெள்ளி கிழமை

முதல் நாள் பர்த் டே கொண்டாட்டம் நள்ளிரவைக் கடந்துவிட்டதாலோ என்னவோ பத்து மணிக்குத்தான் பாட்டை ஒலிக்க விட்டார். மார்கழி மாசத்தில கிராமங்களில் புனல் ஸ்பீக்கரில் கொடூர சத்தமாக ஒலிக்க விடும்போது பலர் தூக்கத்திலிருந்து விழிப்பார்களே… அப்படி பிக்பாஸ் வீட்டில் நிறைய பேர் இருக்காங்க போல.

’சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்ல’ என்ற குத்திசைக்கு ஆட, அவசரம் அவசரமாக அனிதா தயாரானார். வாக்கிங் போய்கொண்டிருந்த வேல்முருகன் அதையே லைட்டா சேஞ்ச் பண்ணி டான்ஸாக உருமாற்றினார்.  வழக்கம்போல தனி ஆவர்த்தனம் ஷிவானி. தனியா ஆட நினைக்கிறதெல்லாம் சரி, எந்தப் பாட்டுபோட்டாலும் முகத்துல ரியாக்‌ஷனே இல்லாமல் ஆடினா எப்படிம்மா?

’கேப்டன்ஷிப் டாஸ்க் நான் செய்ய மாட்டேன்’ என பாலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தக் கூட்டணியே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஷனமே பேசவே பயமா இருக்கு என ஒதுங்கிய பாலா, கூட்டாளியிடம் பேசுவதுபோல, ‘காரணத்தைச் சொல்லு இல்லாட்டி தலையே வெட்டிச்சிடும்போலிருக்கு’ என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். கெஞ்சினாலே பிகு பண்ண வேண்டும் எனும் உலக் விதியை ஷனமும் பின் பற்றினார்.

ஓய்வெடுக்கும் அறையிலிருந்து ஆரியும் ஆஜித்தும் வெளியே வர உத்தரவிட்டார் பிக்பாஸ். சென்ற வாரம் ஒரே நாளில் வெளியே விட்ட பிக்கி, இந்த வாரம் இரவு முழுக்க ஜெயில்லேயே விட்டுட்டார். ‘அட்வைஸ் பண்ணி ஜெயிலுக்குப் போனவரே’ என்று ரியோவின் கமெண்ட் கமல் பஞ்சாயத்து வரை செல்லும் என அப்போது நினைத்திருக்க மாட்டார்.

”ஹேய்… மேன் நீ ரொம்ப தமாஷ் பண்ற” என வடிவேல் ஸ்டைலாய் ஷனமை உசுப்பேத்திக்கொண்டிருந்தார் ரம்யா. ’நானா… நகைச்சுவையா?’ ஆச்சர்யமாகக் கேட்ட ஷனமிடம், “நீங்க சண்டை போட்டு பார்த்தோம்… காமெடி பண்ணிப் பார்த்தோம். அதுல காமெடிதான் நல்லா இருக்கு” என்று ரம்யா சொல்ல கேபி ஆமோதிக்க, ஆரி வாக்களிக்க… ஷனம் ஒரு காமெடி பீஸ் என உள்குத்தோடு முத்திரை குத்தப்பட்டது.

இன்னொரு பக்கம் உறக்கம் கலையாமல் பாலா கிடக்க, அருகில் உட்கார்ந்திருந்த கேபி, ‘அவனுக்கு ஓர் ஆள்மேல விருப்பம் இருக்கு. யார்னு கண்டுபிடி’ என ஆஜித்திடம் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் ‘ஷிவானி’ என்றதும் கைக்கொட்டி சிரித்தார்.

கண் விழித்த பாலா, ‘ஆமா, நீயும் ஷிவானியும்தான் இருங்கீங்க,,, நீ கேள்வி கேட்கிறதால ஷிவானி பேரச் சொல்றான்… ஏன்னா நீ என் தங்கச்சி” என்றார் பாலா. கேபி ஆர்மி (அப்படி இருக்கும்பட்சத்தில்) நிம்மதியானார்கள். சென்ற வாரம்தான் கேபி – பாலாவுக்கு டூயட் பாட்டெல்லாம் போட்டு ப்ரோமா வெளியிட்டார் பிக்கி.  தங்கச்சி என்று பாலா சொன்னாலும், கேபியிடம் சின்ன குறுகுறுப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏனெனில், அண்ணன் – தங்கை  விளையாட்டு இருப்பதுபோல தெரியல. பிக்கியின் பின்கதை சுருக்க குரலில் சொல்வதென்றால் வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்னொரு காட்சியில், நேற்று வரிசைப்படுத்தியது மக்களிடம் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் என ஷனம் அணத்திக்கொண்டிருந்தார். அவரின் கணிப்பு தவறு என்பதாகத் தான் இந்த எப்பிசோட்டின் கடைசி நிமிடங்கள் அமைந்தன.

லஞ்ச் டேபிளில் ‘எல்லோரும் வந்தாச்சாப்பா… முக்கியமான விஷயம் பேசணும்’ என பாலா தயாராகிக்கொண்டிருக்க, பிக்கியும் ஏதோ பஞ்சாயத்து இருக்கு என சூம் செய்ய, ‘என்னை அவன் இவன் என ஏகவசனத்தில் கூப்பிட வேண்டான். மரியாதையா அவர்ர்ர்ர்னு இவர்ர்ர்ர்ர்னு கூப்பிடுங்க’ என்றார். இதுக்குதானா இவ்வளவு பில்டப் – பிக்கியின் டுடே மைண்ட்  வாய்ஸ். பாலா சொன்னது தன்னைத்தான் என்று வேல்முருகனிடன் அணத்திக்கொண்டிருந்தார் நிஷா.

கமல் வருகை

‘வண்ணமயமாக இருக்கீங்க’ என்று பிக்பாஸ் வீட்டுக்குள் அகம் டிவி வழியே நுழைந்தார் கமல். கேபியும் பாலாவும் ஒரே கலரில் டிரஸோடு வரவேற்றார்கள். ரியோ மீசை எடுத்ததைப் பாராட்டும்போது ‘நல்ல கலைஞசனுக்கு அதுதான் அழகு’ என லேசாக ரமேஷைக் குத்தினார்.

ஒவ்வொருவரிடமும் சென்ற வார அனுபவம் கேட்டார் கமல். ‘நல்லவனா மட்டுமல்ல வல்லவனாகவும் ஆட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்’ என கமலுக்கே டஃப் கொடுக்கும் மொழியில் பேசிக்கொண்டிருந்தார் ஆரி. ’ஃபேர் ஆடுனா அதை ரசிக்கவும் மக்கள் இருக்காங்க’ என்று சொல்லி ஆரியை அமைதியாக்கினார்.

‘பலரின் டிப்ளமேஸி உடைஞ்சிது’ என அனிதா சொன்னபோது வேல்முருகனை இழுத்தார் கமல். அப்பக்கூட பாலா அப்படிச் சொன்னதைக் கண்டிக்கக்கூட இல்லையே ஏன் கமல்?

சுரேஷ் தனது தவறை ஒத்துக்கொள்ள, ஷனம் அதைப் பற்றி பேச ஆரம்பிக்க, ’அந்த விஷயத்துக்குப் பின்னாடி வருகிறேன்’ என்றார் கமல். ஆமாம்மா… அதை தனி ஒரு கண்டண்ட் கிடைக்க வாய்ப்பிருக்குல.

‘ஜெயிலுக்குப் போனது கஷ்டமா இருந்துச்சு’ என்றார் ஆஜித். ‘ஏசி ரூம்… வீட்டு வேலை கூட செய்ய வேண்டியதில்லை… அப்பறம் என்ன கஷ்டம் என யோசித்தால் கூடவே ‘அட்வைஸ்’ ஆரி இருக்கிறார் அல்லவா… அப்ப கஷ்டம்தான் ப்ரோ.

‘குழந்தை மாதிரி’ நு சொல்லி என்னை இம்மெச்சூராக் காட்ட ட்ரை பண்றாங்க’  என அர்ச்சனாவை மறைமுகமாகச் சாடினார். அதை அவரும் புரிந்துகொண்டு தலையாட்டினார்.

‘சரி விஷயத்துக்கு வருவோம்’ என சுரேஷ் – ஷனம் சண்டைக்குப் பஞ்சாயத்து பண்ண வந்தார் கமல். ஆனால், அந்த விஷயம் எரிஞ்சு, அணைந்து, சாம்பலாகி, சாம்பலும் காற்றில் கலந்து போயிருந்ததால்… எவ்வளவு பத்த வெச்சும் நனைஞ்ச விறகாட்டும் கிடந்தது. ஆனாலும், சின்ன சண்டைக்கு சம்பந்தபட்ட இருவருக்கும் முன்பின் சம்பவங்கள் எவ்வளவு உளவியலாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. கமல் இன்னும் இந்த பஞ்சாயத்தை இழுத்தார். ’அடிச்சடி ரெண்டு மணிநேரம்… ரெஸ்ட் அரை மணிநேரமா’ என தலைவன் வடிவேல் காமடியை உல்டா செய்து ‘சண்டை நடந்தது அரை மணிநேரம்… அதுக்கு பஞ்சாயத்து இரண்டு மணிநேரமா ஆழ்வார்பேட்டை சார்?

’வந்த வேலையை மறந்துட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் மாதிரியே இருக்கிற மாதிரி இருக்கே’ என அர்ச்சனாவுக்கான கத்தியை உருவினார். இது சோஷியல் மீடியாவில் பலரும் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம்தான். ஆனால், அது ஒரு நிமிடம்கூட அர்ச்சனா உணர வில்லை என்பது ஆச்சர்யம்தான்… காம்பியரிங் செய்வது அவருக்குள் ஆவிபோல குடிபுகுந்துவிட்டதுபோல. ’இனி மாத்திக்கிறேன் சார்’ என சத்தியம் செய்தார்.

பாலா, அர்ச்சனா சண்டையை விசாரிக்கையில் ‘பாலா’ ஸாரி கேட்டதும், ‘புடவை கடையில கூட இத்தனை ஸாரி இருந்திருக்காது’ என 70’ஸ் ஜோக் அடித்து, சிரிப்புக்காகக் காத்திருந்தார் கமல். சிலர் லேசாகச் சிரித்து வைத்தார்கள்.

ஆஜித், சோம்ஸ், ரமேஷ், சம்யுக்தா…. நால்வரும் உள்ளே இருக்கும் ஆடியன்ஸாக மாறிவிட்டீர்கள் எனச் சொல்லி வைத்தார். வரும் வாரத்துக்கு ஏதாவது கண்டண்ட் கொடுப்பார்கள் எனும் நப்பாசையோடு.

போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்க, (அதாவது நீங்க நினைக்கற மாதிரிதான்) ஒரு விளையாட்டைக் கொண்டு வந்தார் கமல். எவிக்‌ஷன் நாமினேஷனில் இருப்பவர்களில் இருவரை மற்றவர்கள் செலக்ட் செய்ய வேண்டும். ஒருவர் வெளியேற, ஒருவர் பாதுகாக்க.

வெளியேற வேண்டும் என்று அதிக ஓட்டுகள் கிடைத்தது ஆஜித் மற்றும் பாலாவுக்கு. (ரியோ குருப் பாலாவுக்கு X போட்டுத் தள்ளியது… சோம்ஸ் போட்டது ஆச்சர்யமே) சம்யுக்தா, ஷிவானி, கேபி ஆகியோர் அனிதா வெளியேற ஓட்டுபோட்டதும் அனிதா முகம் மாறியது.

ஷிவானி சொல்லும்போது ‘இதை எதிர்பார்த்ததுதான்’ என்பதாகச் சொல்லிக்கொண்டார். ஆக, அனிதாவுக்கு எதிராக ஒரு குருப்பிஸம் ஓட்டிக்கொண்டிருக்க போல. கேபிரியல்லாவை ’கேபி’ என்று கமல் கூப்பிட்டதும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

இறுதியாக, எவிக்‌ஷனிலிருந்து பாலா விடுவிக்கப்பட்டதை ‘இப்பவே லேட்டாயிடுச்சு’ எனும் தொனியில் பெரிய சஸ்பென்ஸ் வைக்காமல் சொல்லி விடைபெற்றார் கமல். வழக்கமான அரசியன் பன்ச் எதையும் இன்றைக்கு கேட்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமையிலாவது இருக்குமா ஆண்டவரே..

 ‘பாலா’ பாதுகாக்கப்பட்டதும் கேபியின் உற்சாகத்தோடு கொண்டாடினார். (ஒஹோ…) ‘வந்த நாள்லேருந்து குழந்தை குழந்தைன்னு சொல்லி எல்லாத்துக்கு என்னையே சொல்லிட்டு இருக்காங்க’ என ஷனமிடம் ‘கடுப்பேத்தறாங்க மைலார்டு’ எனச் சொல்லிக்கொண்டிருக்க, ‘சரி… சரி… போய் படுங்க… நாளைக்கு பெரிய பஞ்சாயத்து இருக்கு’ என்பதாக லைட்ஸ் ஆஃப் பண்ணினார் பிக்கி.

ஞாயிற்றுக்கிழமையில் கேப்டன் செலக்‌ஷன் இருப்பதோடு, யார் எவிக்‌ஷன் எனும் அறிவிப்பும் இருக்கிறது.

இப்போதைய பட்சியின் சகுணத்தின்படி ’ஆஜித்’ எவிக்‌ஷனுக்குச் செலக்ட்டாகி, எவிக்‌ஷன் ப்ரீ பாஸ் மூலம் மீண்டும் வீட்டுக்குள் இருக்க வைக்கப்படுவார் என்றே தெரிகிறது. எனினும் இன்னும் சில மணி நேரங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும்.

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு | பதினேழு | பதினெட்டு | பத்தொன்பது | இருபது

மாவட்ட செய்திகள்

Most Popular

அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்த தினகரனை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை வள்ளலார் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒரு கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை அமைச்சர் ஜெயக்குமார் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.

புதிய அமைப்பை தொடங்குகிறார் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர்!

இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ சந்திரசேகர் தற்போது சமுத்திரகனி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். விஜய் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும்...

சசிகலாவை சந்தித்தது ஏன்? -நடிகர் பிரபு விளக்கம்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸில் இருந்தவர். பின்னர் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் நின்று தோல்வியடைந்தார். இந்த சூழலில் சிவாஜியின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் அண்மையில் பாஜகவில்...
TopTamilNews