சென்னையில் மேலும் ஒரு பள்ளி: 20 மாணவிகள் புகார்

 

சென்னையில் மேலும் ஒரு பள்ளி: 20 மாணவிகள் புகார்

சென்னை பத்மாசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் கை செய்யப்பட்டார். ஆனாலு, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.

சென்னையில் மேலும் ஒரு பள்ளி: 20 மாணவிகள் புகார்

இதையடுத்து குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் துணை ஆணையர்ஜெயலட்சுமி, தனது9444772222 செல்போன் எண்ணை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த தனக்கு நேரிடையாக புகார் சொல்லலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து 15பள்ளி மாணவிகள் புகார்தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து 7 மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு தனியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னையின் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமியில் படிக்கும் தடகள் மாணவிகள்20 க்கும் மேற்பட்டோர் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாரெழுந்துள்ளது. பயிற்சியின் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் கொதித்தெழுந்தாலும், பயத்தினால் யாரும் நேரடியாக புகாரளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளின் சார்பாக ஒருவர் புகார் எழுப்பி இருக்கிறார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.