திருமாவளவன் எதிர்பார்த்த நல்ல சேதி… ஏமாற்றிய ஆளுநர்!

 

திருமாவளவன் எதிர்பார்த்த நல்ல சேதி… ஏமாற்றிய ஆளுநர்!

2021ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியதும், ஆளுநர் உரையினை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசியபோது, வெளிநடப்பு செய்ததற்கான காரணங்களாக சொன்னவற்றுள் ஏழு பேரின் விடுதலை விவகாரமும் ஒன்று.

திருமாவளவன் எதிர்பார்த்த நல்ல சேதி… ஏமாற்றிய ஆளுநர்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது ஆளுநரிடம் கொடுத்து. இதுவரைக்கும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் ஆளுநர் உரையை புறக்கணிக்க முக்கியமான காரணங்களும் இதுவும் ஒன்று என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையாற்றப்போகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. சட்டப்பேரவை தீர்மானத்தையோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பையோ மதிக்காத அந்த நபர் உரையாற்றுவது தமிழ்நாட்டை அவமதிப்பதாகாதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு.

திருமாவளவன் எதிர்பார்த்த நல்ல சேதி… ஏமாற்றிய ஆளுநர்!

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக 9.9.2018ல் தமிழ்நாடுபேரவை இயற்றிய தீர்மானம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இன்று சட்டப்பேரவை வருகிறார் ஆளுநர். விடுதலையை விரைந்து முடிவெடுக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனோ, ‘’ஒருவார காலக்கெடு முடிந்து சில நாட்களும் கடந்துவிட்டன. பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து இன்னும் வாய்திறக்காத ஆளுநர் இன்று(02-02-2021) சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார். இந்த உரையிலேனும் ஆளுநர் அவர்கள் தமிழ்மக்களுக்கு நல்லசேதி சொல்ல வேண்டும்’’ என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், ஆளுநர் அதுகுறித்து பேசவில்லை.