இதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு

 

இதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு

75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருக்கிறது திமுக.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரலின் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கிறது திமுக.

இதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு

கனிமொழி, உதயநிதி, ஐ.பெரியசாமி, திண்டுகல் லியோனி உள்ளிட்ட ஏழு கழக முன்னணியினர் இதுவரை கடந்த 11 நாட்களில், 2099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 கழக மாவட்டங்களிலுள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளனர் என்று விடியலைநோக்கி ஸ்டாலினின் குரல் சார்பாக திமுக தலைமை தெரிவித்திருக்கிறது.