சசிகலாவை வரவேற்க செல்கிறாரா ஓபிஎஸ்.?

 

சசிகலாவை வரவேற்க செல்கிறாரா ஓபிஎஸ்.?

விடுதலையான சசிகலா பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் தமிழகம் வருகிறார்.

இதை முன்னிட்டு அமமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பெங்களூர் -ஓசூர்-ஆம்பூர்- ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வரும் சசிகலாவுக்கு சென்னை எல்லையில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அமமுக சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சசிகலாவை வரவேற்க செல்கிறாரா ஓபிஎஸ்.?

சின்னம்மாவை வரவேற்க அமமுகவினர் மட்டுமல்லாது அதிமுகவினரும் திரண்டு வருவார்கள். துணைமுதல்வரும் சென்னைக்கு எல்லைக்கு வந்து சின்னமாவை வரவேற்பார் என்று தனது நிர்வாகிகளிடம் உறுதியாக சொல்லி வருகிறாராம் டிடிவி தினகரன்.

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக்கொண்டே, தன்னுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கே தெரியாமல், டிடிவி தினகரனை சந்தித்து பேசியதை தினகரனே போட்டு உடைத்தார்.

சசிகலாவை வரவேற்க செல்கிறாரா ஓபிஎஸ்.?

சசிகலாவை மீண்டும் அதிமுக சேர்க்க 100 சதவிகிதம் வாயிப்பில்லை என்று முதல்வர் சொல்லி வரும் நிலையில், ஓபிஎஸ் அதுகுறித்து வாய் திறக்காது இருக்கிறார். அவரது மகன் வேறு, பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மையார் சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று, அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார். இது சர்ச்சை ஆனதும், மனிதாபிமான அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தேன் என்கிறார்.

சசிகலாவை வரவேற்க செல்கிறாரா ஓபிஎஸ்.?

ஆட்சியில் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்று தொடர்ந்து ஓபிஎஸ் வருவதாலும், சசிகலாவுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனால்தான் தினகரன் சொன்னது உண்மையாகவே நடக்கும் என்றே பேச்சு எழுந்திருக்கிறது.