2,098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

2,098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மரியாதை செலுத்தினார்.
2,098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

இந்த சூழலில் சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் பொன்முடி பேசும் போது, தேசிய மாணவர்கள் சேர்க்கை விகிதம் 27.1 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு ஆகும். உயர்கல்வியில் மாறிவரும் சூழல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறை மற்றும் பாடஅறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த கல்வி ஆண்டில் 2,098 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.