Home அரசியல் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை... அதற்கு சொல்லப்படும் இரண்டு காரணங்கள்!

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை… அதற்கு சொல்லப்படும் இரண்டு காரணங்கள்!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆனபோது சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது பெரும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது.

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை... அதற்கு சொல்லப்படும் இரண்டு காரணங்கள்!
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை... அதற்கு சொல்லப்படும் இரண்டு காரணங்கள்!

சசிகலா மருத்துவமனையில் விடுதலை ஆனபோது, ‘’அதிமுக தலைவர் சசிகலா டிஸ்சார் ஆனார்’’ என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. தொடர்ந்து சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்படிருந்தது குறித்த கேள்வி எழுந்தது.

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் உண்டா? என்ற கேள்விக்கு, சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது சட்ட விரோதம் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

ஆனால், சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றும், அதிமுக கொடி பயன்படுத்தும் அத்தனை அதிகாரமும் சசிகலாவிற்கு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை... அதற்கு சொல்லப்படும் இரண்டு காரணங்கள்!

இதையடுத்து, சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்றால், அமமுக என்ற கட்சி எதற்காக தொடங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.

அதற்கும் சாமர்த்தியமாக, அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது என்றார் தினகரன்.

அதிமுக பொதுச்செயலாளர் என தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார் சசிகலா. 2017ல் இருந்து அந்த பொறுப்பில் இருந்தும் அகற்றப்பட்டார். அதனால் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த உரிமை இல்லை என்கிறது அதிமுக தரப்பு.

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை... அதற்கு சொல்லப்படும் இரண்டு காரணங்கள்!

பொதுச்செயலாளர் இல்லை என்றாலும், அடிப்படை உறுப்பினர் என்ற முறையிலாவது அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தலாமே? என்று எழும் கேள்விகளுக்கும், அமைச்சர் ஜெயக்குமார் இன்று அதிரடியான பதிலை அள்ளி வீசியிருக்கிறார்.

’’அதிமுகவின் கட்சிகொள்கையின்படி, ஒருவர் கோர்ட்டுக்கு சென்றுவிட்டாலே அவருடைய அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விடுபட்டவர் ஆகிறார் என்று அர்த்தம். மேலும், அவர் வேறு கட்சியை ஆரம்பித்துவிட்டார் என்ற காரணத்தினாலும் அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை’’என்றிருக்கிறார்.

இதை இத்தோடு விடுவதாக இல்லை அதிமுக தரப்பு. சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சேலம் காவல் ஆணையரிடம் அதிமுகவினர் புகாரளித்திருக்கின்றனர்.

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை... அதற்கு சொல்லப்படும் இரண்டு காரணங்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மக்களே உஷார்…! கொரோனா இரண்டாம் அலை “மிகவும் ஆபத்தானது” – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது....

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர்...

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக்...
- Advertisment -
TopTamilNews