இந்துக்களை ஆதரிக்காவிட்டால் திமுகவை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறியா? காயத்ரிரகுராம்

இந்துக்களை ஆதரிக்காவிட்டால்  திமுகவை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறியா? காயத்ரிரகுராம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தொகுதி-தையூரில் அதிமுக, பாமக-தேமுதிக-அமமுக, தமாகா-பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 7289 பேர் தங்கள் உறுப்பினர் அட்டைகளை ஒப்படைத்து உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்துக்களை ஆதரிக்காவிட்டால்  திமுகவை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறியா? காயத்ரிரகுராம்

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின், ‘’கொள்ளையடிக்கும் அடிமைகளை விரட்ட கழகத்தில் இணைந்த அவர்களை வாழ்த்தி வரவேற்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது , உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் மற்றும் முருகன் சிலையை அளித்தனர் திமுக நிர்வாகிகள். திருத்தணியில் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசாக கொடுத்திருந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உதயநிதிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவின் வேல் யாத்திரைக்கு எதிராகத்தான், வேல்யாத்திரையினால் பாஜகவுக்கு செல்வாக்கு கூடியிருப்பதால்தான் திமுகவும் கையில் வேல் எடுத்திருக்கிறது. ஆனால், வேல் நாடகம் நடத்துகிறது என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்துக்களை ஆதரிக்காவிட்டால்  திமுகவை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறியா? காயத்ரிரகுராம்

இதுகுறித்து நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’திமுக தொண்டர்கள் பாஜகவின் வெற்றிகரமான வெற்றிவேல் யாத்திரை காரணமாக உதயநிதி மற்றும் ஸ்டாலின் மீது இந்து கடவுளை திணிக்கிரார்களா அல்லது இந்துக்களை ஆதரிக்காவிட்டால் அவர்கள் திமுகவை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறியா?’’ என்று கேட்டிருக்கிறார்.

இந்துக்களை ஆதரிக்காவிட்டால்  திமுகவை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறியா? காயத்ரிரகுராம்

மேலும், ‘’விடுங்கபா, அவர்கள் ஒருபோதும் இந்து கடவுள்களின் மீது ஆர்வம் காட்ட மாட்டார்கள். நாடகத்தை நிறுத்துங்கள். இந்து மதம் முக்கியமானது மற்றும் இந்து கடவுள் முக்கியமானது என்று நீங்கள் நினைத்தால் திமுகவிலிருந்து விலகி, திமுக தொண்டர்கள் பாஜகவில் இணையுங்கள்’’ என்கிறார்.