வரதட்சணை கேட்பது குற்றமல்ல… நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் அடுத்த சர்ச்சை

 

வரதட்சணை கேட்பது குற்றமல்ல… நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் அடுத்த சர்ச்சை

வரதட்சணை கேட்பது குற்றமல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. பெண் நீதிபதிதான் இந்த தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். ஒரு பெண்ணாக இருந்தும் இப்படியான தீர்ப்பினை வழங்கி இருப்பதால் நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

வரதட்சணை கேட்பது குற்றமல்ல… நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் அடுத்த சர்ச்சை

மும்பை உயர்நீதிமன்றம்தான் இன்று இந்திய அளவில் மிகவும் கவனம் பெற்றிருக்கிறது. நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் அடுத்தடுத்த சர்ச்சை தீர்ப்புகளால்தான் மும்பை நீதிமன்றம் இந்த அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. ஸ்கின் டு ஸ்கின் டச் ஆனால்தான் அது போஸ்கோ சட்டத்தின் கீழ் வரும் என்றும், இளைஞரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அந்த இளைஞர் பிடித்திருந்ததை வைத்தும், பாலியல் வன்கொடுமை என்று கருதிவிட முடியாது என்றும் சொன்ன நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் தீர்ப்புகளால் இந்தியாவே அதிர்ந்து போயிருக்கிறது.

வரதட்சணை கேட்பது குற்றமல்ல… நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் அடுத்த சர்ச்சை

நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் இப்படியான சர்ச்சை தீர்ப்புகளினால் கண்டனங்கள் வலுத்து வந்ததால், மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்காக புஷ்பா கனெடிவாலாவுக்கு வழங்கப்பட்டிருந்த பரிந்துரையை திரும்ப பெற்றது உச்சநீதிமன்ற கொலிஜியம்.

ஆனாலும், புஷ்பா கனெடிவாலாவின் சர்ச்சை தீர்ப்புகள் தொடர்கின்றன. மனைவியிடம் கணவன் வரதட்சனை கேட்பது துன்புறுத்தல் ஆகாது அடுத்த அதிரடியை காட்டி இருக்கிறார்.

வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் திருமணமாகி 9 ஆண்டுகளில் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறை தண்டனையை, ஐபிசி பிரிவு 498ன் படி, மனைவியிடம் வரதட்சனை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என்று கூறி, குற்றவாளி பிரசாந்த் ஜாரேவை விடுதலை செய்திருக்கிறார் புஷ்பா கனெடிவாலா.

1995ம் ஆண்டில் பிரசாந்த் ஜாரேவை திருமணம் செய்துகொண்ட அப்பெண், 12.11.2004ல் தற்கொலை செய்துகொண்டார். கேட்ட வரதட்சனை கொடுக்காததால் என் மகளை அவரது கணவரும், மாமியாரும் சேர்ந்து துன்புறுத்தியதால் என் மகள் தற்கொலை செய்துகொண்டு விட்டார் என்று தர்வார் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அப்பெண்ணின் தந்தை. புகாரினை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வரதட்சணை கேட்பது குற்றமல்ல… நீதிபதி புஷ்பா கனெடிவாலாவின் அடுத்த சர்ச்சை

இதுதொடர்பான வழக்கு விசாரணை மும்பை யவத்மால் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து, 2.4.2008ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஐபிசி பிரிவு 306(தற்கொலைக்கு தூண்டுதல்), ஐபிசி பிரிவு 498A (கணவர், கணவரின் உறவினரின் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது.

306 பிரிவின்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 498 பிரிவின் படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தான் சாதித்து காட்டப்போவதாகவும் சவால் விட்டிருந்தார் பிரசாந்த் ஜாரே. அதன்படியே அவர் சாதித்து காட்டியிருக்கிறார் புஷ்பா கனெடிவாலாவின் தீர்ப்பினால்.

ஒரு பெண்ணாக இருந்தும் வரதட்சணை கேட்பது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கி இருப்பதால் நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.