தமிழகத்தில் 5 மாத காலத்தில் 209 பேர் போலீசார் உயிரிழப்பு!

 

தமிழகத்தில் 5 மாத காலத்தில் 209 பேர் போலீசார் உயிரிழப்பு!

தமிழகத்தில் சமீபகாலமாக காவல்துறையினரின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு உடல் நலக்குறைவால் இறப்பது, தற்கொலை செய்துகொள்வது, நோயினால் இறப்பது ஆகிய காரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் 108 காவலர்கள் உயிரிழந்த நிலையில் , 59 பேர் மாரடைப்பால், 70 பேர் விபத்தினால், 48 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு 40 காவலர்கள் உயிரிழந்த நிலையில், கொலை செய்யப்பட்டு ஒருவரும், புற்றுநோயால் 9 பேரும், வீரமரணம் அடைந்து இரண்டு பேரும் என மொத்தம் 337 பேர் இறந்தனர்.

தமிழகத்தில் 5 மாத காலத்தில் 209 பேர் போலீசார் உயிரிழப்பு!

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான 5 மாத காலத்தில் 209 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் 59 பேர், தற்கொலை செய்துகொண்டு 17 பேர், புற்றுநோயால் 9 பேர் , மாரடைப்பினால் 27 பேர் , விபத்தில் சிக்கி 21 பேர், உடல் நலம் பாதிக்கப்பட்டு 64 பேர் என மொத்தம் 250 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் 5 மாத காலத்தில் 209 பேர் போலீசார் உயிரிழப்பு!

மே மாதத்தில் மட்டும் இரண்டாவது அலை காரணமாக 47 பேரும் , தற்கொலை செய்து கொண்டு நான்கு பேரும், புற்றுநோயால் ஒருவரும், 5 பேர் விபத்தில் சிக்கி, 7 பேர் மாரடைப்பினால், 20 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அத்துடன் சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மே மாதத்தில் மட்டும் 81 காவலர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.