துரைமுருகன் வெளியிட்ட வீடியோ… எச்.ராஜா எழுப்பும் கேள்வி

 

துரைமுருகன் வெளியிட்ட வீடியோ… எச்.ராஜா எழுப்பும் கேள்வி

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், அதிமுகவை நிராகரிக்கிறோம், ஸ்டாலின் வர்ராறு விடியல் தரப்போறாரு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று திமுக பல்வேறு தேர்தல் பிரச்சாரம் வடிவங்களை முன்னெடுத்து வரும் நிலையில், 100 நாள் திட்டத்தினையும் முன்னெடுத்திருக்கிறது.

துரைமுருகன் வெளியிட்ட வீடியோ… எச்.ராஜா எழுப்பும் கேள்வி

உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதே எனது முதல் பணி . எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.

திமுக ஆட்சியின் முதல் 100 நாளில் மக்களின் குறைகளை தீர்க்க வேண்டுமென்றால் இனி வரும் 100 நாட்கள் நாம் அயராது உழத்திட வேண்டும். 100 நாள் திட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை, தேர்தல் களத்தில் 100% வெற்றியாக அமையும் என்றும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

துரைமுருகன் வெளியிட்ட வீடியோ… எச்.ராஜா எழுப்பும் கேள்வி

இதையடுத்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், “கழக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தீர்ப்பேன் என உறுதியளித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்” என்று வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.

துரைமுருகன் வெளியிட்ட வீடியோ… எச்.ராஜா எழுப்பும் கேள்வி

இந்த வீடியோ பதிவு குறித்து, பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘’ஆஹா எவ்வளவு பெரிய பொய்யர்கள் இவர்கள். 1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு 3 படி அரிசி போடுகிறோம் என்றீர்களே போட்டீர்களா? 2006 ல் நிலமற்ற ஏழைகள் அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் தருவோம் என்றீர்கள் தந்தீர்களா? எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே? தமிழ் நாட்டிலே..? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.