கனிமொழி குறித்த சர்ச்சை பதிவினை அகற்றிய பின்னரும் தொடரும் கண்டனம்

 

கனிமொழி குறித்த சர்ச்சை பதிவினை அகற்றிய பின்னரும் தொடரும் கண்டனம்

அனைத்து சாதியினரும் தாங்கள் நம்பும் கடவுளை நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை பெரும்பான்மை இந்துக்களுக்காக தலைவர் கலைஞர் கொண்டு வந்தார். அனைத்து இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும் பிஜேபி பெரும்பான்மை இந்துக்களின்..விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா ? என்று கனிமொழி கடந்த 28ம்தேதி அன்று டுவிட்டரில் ஒரு கேள்வியை எழுப்ப,

கனிமொழி குறித்த சர்ச்சை பதிவினை அகற்றிய பின்னரும் தொடரும் கண்டனம்

மறுநாள் 29 தேதி அன்று,கண்டவனும் நுழைய கோவில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா? என்று தமிழக பாஜகவின் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின் நிர்வாக இயக்குநர் கோபிகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில், பதில் அளித்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவே இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

திமுக தர்மபுரி எம்.பி. செந்தில்குமார், கோபிகிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். திருநெல்வேலி போலீசில் கோபிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரும் கொடுக்கப்பட்ட நிலையில், கோபிகிருஷ்ணன் தனது பதிவுகளை அழித்துள்ளார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஒரு பெண் கேள்வி எழுப்பினால் அசிங்கமாக பதில் சொல்வதில் ஆணாதிக்க மநு வெளிப்படுகிறார். கோயில் கருவறை படுக்கைஅறை இல்லைதான். அதுபோல அது பிராமணர்களின் தனி அறையும் இல்லை. உரிய பயிற்சி பெற்ற அனைத்து இந்துக்களுக்கும் உரியது. இதை ஏற்காத பாஜக இந்துவிரோத கட்சி என்கிறார் முத்த அரசியல் விமர்சகர் அருணன்.

இதற்கு, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘’அண்ணே இந்து என்பதையே ஏற்காத உங்களுக்கு கோயில் கவலை எல்லாம் வேண்டாம். உரிய பயிற்சி பெற்றவர்கள் பலகாலமாக பல கருவறைக்குள் பூசை செய்கிறார்கள். இந்து மதம் சீர்திருத்தங்களின் தாய். ஒரே மதம் ஒரே இனம் ஒரே இறைவன் என தன் மீது ஆணி அடித்துக்கொள்ளவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.