அடுத்தடுத்து அதிர்வலைகள் ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு நேர்ந்த கதி!

 

அடுத்தடுத்து அதிர்வலைகள் ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு நேர்ந்த கதி!

நீதிபதிகள் நியமனத்தில் நிரந்தர நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்து, அதன்பின்னர் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். இந்த பரிந்துரையில் நியாயமில்லை என்று பின்னர் கருதும் பட்சத்தில் பரிந்துரையினை திரும்பக் பெற்றுவிடும் உச்சநீதிமன்ற கொலிஜியம்.

அடுத்தடுத்து அதிர்வலைகள் ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு நேர்ந்த கதி!

மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்காக புஷ்பா கனெடிவாலாவுக்கு வழங்கப்பட்டிருந்த பரிந்துரையை திரும்ப பெற்றது உச்சநீதிமன்ற கொலிஜியம்.

பெண் நீதிபதியின் புஷ்பா கனெடிவாலா தனது தீர்ப்புகளால் அடுத்தடுத்து ஏற்படுத்திய அதிர்வுகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கொய்யாப்பழம் தருவதாக சொல்லி 12 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச்சென்று மார்பகங்களைபிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டில், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இலைஞர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த புஷ்பா கனெடிவாலா, ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. ஸ்கின் டு ஸ்கின் டச் ஆனால்தான் அது போஸ்கோ சட்டத்தின் கீழ் வரும் என்றும் அவர் தீர்ப்பில் தெரிவித்தார்.

அடுத்தடுத்து அதிர்வலைகள் ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு நேர்ந்த கதி!

இந்த தீர்ப்புக்கு நாடெங்கிலும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த சூழலில் வேறொரு வழக்கிலும் இதே போன்று சர்ச்சை தீர்ப்பினை வழங்கினார்.

இளைஞரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அந்த இளைஞர் பிடித்திருந்ததை வைத்தும், பாலியல் வன்கொடுமை என்று கருதிவிட முடியாது என்றும் கூறி இருக்கிறார்.

பெண் நீதிபதி ஏற்படுத்திய இந்த சர்ச்சைகளை அடுத்து, தேசிய பெண்கள் ஆணையமும், மத்திய அரசின் அட்டர்ஜின் ஜெனரல் வேணுகோபாலும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதால், எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, ஆர்.எப்.நாரிமன் அடங்கிய குழு , புஷ்பா கனெடிவாலாவுக்கு வழங்கிய பரிதுரையை திரும்பபெற்றது.