ஆப்பிள் போன்கள் தமிழகத்தில் உற்பத்தியாகும் – அரசு அனுமதி !

 

ஆப்பிள் போன்கள் தமிழகத்தில் உற்பத்தியாகும் – அரசு அனுமதி !

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவன ஆலை தமிழகத்தில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் கோரியுள்ள வசதிகளை தமிழக அரசு உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகளை திரட்டி வரும் நிலையில், தற்போது புதிதாக ரூ.52,257 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு வெளிநாட்டு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் அமைய உள்ள 34 தொழில் திட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அவற்றில், ஆப்பிள் நிறுவனத்தின் ஆலை,டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தைவனைச் சேர்ந்த தொழில் குழுமங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

ஆப்பிள் போன்கள் தமிழகத்தில் உற்பத்தியாகும் – அரசு அனுமதி !

இந்த தொழில் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் 94 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ளது. அந்த ஆலைகளில் விரிவாக்கம் நடைபெற உள்ளன. டாடா எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டநிறுவனங்கள் தொடங்குவதன் மூலம் , ஆப்பிள் நிறுவனமும் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்பிள் போன்கள் தமிழகத்தில் உற்பத்தியாகும் – அரசு அனுமதி !

டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தருமபுரியில் ரூ.5,763 கோடி மதிப்பில் செல்போன் தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளது. அதன் மூலம் 18,250 வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளது. பெகட்ரான் நிறுவனம் மஹிந்திரா நகரத்தில் ஆயிரம் கோடி மதிப்பில் செல்போன் உற்பத்தி நிறுவனத்தை தொடங்க உள்ளது. அதன் மூலம் 14 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறியுள்ளது. பெகட்ரான் நிறுவனம் ஆப்பிள் போன் தயாரிப்பில் மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர லக்‌ஷேர் நிறுவனம் ரூ.750 கோடியில், ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு கருவிகள் தயாரிக்கும் ஆலையை அமைக்க உள்ளது. இதுதவிர தமிழ்கத்தில் சன் எடிசன், ஓலா எலெக்ட்ரில் நிறுவனங்களும் தமிழகத்தில் தொழில்தொடங்கும் வேலைகளில் இறங்கி உள்ளன. ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் அருகே எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளது. இந்த தொழில் முதலீடுகள் மூலம் தமிழகத்தில் மின்னணு உற்பத்தி துறை வேகமெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.