என் வாழ்க்கையே என் செய்தி… கமல் உருக்கம்

 

என் வாழ்க்கையே என் செய்தி… கமல்  உருக்கம்

என் வாழ்க்கையே என் செய்தி’ என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை என்கிறார் கமல்.

என் வாழ்க்கையே என் செய்தி… கமல்  உருக்கம்

மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவு நாளையொட்டி பல்வேறு தலைவர்களும் அவருக்கு மலர் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் இன்று, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர். அரசு சார்பில் இன்று (30.1.2021) சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார் முதல்வர்.

காந்தியடிகளின் மீது தனிமரியாதை கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், காந்தியடிகளின் 74-வது நினைவு தினத்தில், ‘’என் வாழ்க்கையே என் செய்தி’ என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை என்கிறார்.