கணவரா? கறவை மாடா? கன்பியூஸ் ஆன ஸ்டாலின்

 

கணவரா? கறவை மாடா? கன்பியூஸ் ஆன ஸ்டாலின்

பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் உளறி கொட்டுவதை கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். ஆனால், இப்போதுதான் நேரில் பார்க்கிறோம் என்று கிண்டலடித்து சிரித்தனர் திருவண்ணாமலை திமுகவினர்.

கணவரா? கறவை மாடா? கன்பியூஸ் ஆன ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் மனுவாக எழுதி போட வேண்டும். அதை படித்து விட்டு, சம்பந்தப்பட்ட நபரை அழைத்து ஸ்டாலின் பேசுவதாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கணவரா? கறவை மாடா? கன்பியூஸ் ஆன ஸ்டாலின்

திருமலை என்ற விவசாயி தனக்கு கறவை மாடு வேண்டும் என்று ஒரு மனு எழுதி போட்டிருந்தார். இந்த மனுவை ஸ்டாலின் படித்தபோது, கணவனை காணவில்லை என்று ஒருவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த கூட்டத்தில் இருக்கிறாரா? என்று கேட்க, அங்கிருந்த நிர்வாகிகள் திருமலையிடம் மைக்கை கொடுத்து பேசச்சொன்னதும், தான் கறவை மாடு வேண்டும் என்றுதான் மனுவில் கேட்டிருக்கிறேன் என்று சொன்னதும், அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், கறவை மாடு வேண்டும் என்பதை தவறுதலாக கணவரை மீட்டுத்தரவேண்டும் என்று படித்துவிட்டதை உணர்ந்து, அந்த விவசாயியை அங்கேயே அமரவைத்து சமாளித்தார்.

ஸ்டாலினின் உளறலை நேரடியாக பார்த்த மக்களின் சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.

உண்மை என்னவென்றால், தனது கணவரை காணவில்லை என்று பெண் ஒருவர் மனு எழுதி இருந்தார். இந்தந்த மனுதான் வருமென்று முன்கூட்டியே திட்டமிட்டதில், தவறு நடந்துவிட்டதாக தெரிகிறது.