கண்டவனும் நுழைய கோவில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா? பிஜேபி பிரமுகர் எழுப்பிய சர்ச்சை

 

கண்டவனும் நுழைய கோவில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா? பிஜேபி பிரமுகர் எழுப்பிய சர்ச்சை

தமிழக பாஜகவின் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின் நிர்வாக இயக்குநர் கோபிகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில், கண்டவனும் நுழைய கோவில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா? என்று கேள்வி எழுப்பி இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கண்டவனும் நுழைய கோவில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா? பிஜேபி பிரமுகர் எழுப்பிய சர்ச்சை

பிராமணரல்லாதார் ஏன் அர்ச்சகராக முடியாது? என்ற கேள்விக்கு பிஜேபி பிரமுகரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

’’ஒரு பெண் கேள்வி எழுப்பினால் அசிங்கமாக பதில் சொல்வதில் ஆணாதிக்க மநு வெளிப்படுகிறார். கோயில் கருவறை படுக்கைஅறை இல்லைதான். அதுபோல அது பிராமணர்களின் தனிஅறையும் இல்லை. உரிய பயிற்சி பெற்ற அனைத்து இந்துக்களுக்கும் உரியது. இதை ஏற்காத பாஜக இந்துவிரோத கட்சி என்கிறார் முத்த அரசியல் விமர்சகர் அருணன்.

அவர் மேலும், ‘’உரிய பயிற்சி பெற்றிருந்தாலும் பிராமணரல்லாதார் அர்ச்சகராக முடியாது என்று கூறியிருக்கிறார் பாஜக தலைவர் எல். முருகன். பிஜேபி என்றால் பிராமணிய ஜனதா கட்சி, இந்து வெகுமக்களுக்கு எதிரான கட்சி என்பது உறுதியாச்சு’’ என்கிறார்.

பிஜேபியின் பிரமுகரான குஷ்புவே இதை கடுமையாக கண்டித்துள்ளார்.

ஒரு தனிநபரைப்பற்றி, அதுவும் ஒருபெண்ணை இப்படி இழிவாக, அவமரியாதை படுத்தும் கருத்துக்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அவருக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். அவமரியாதை செய்யக்கூடாது என்று கடுமை காட்டியிருக்கிறார்.