விவசாயிகளை தாக்கும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் யார் ?

 

விவசாயிகளை தாக்கும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் யார் ?

டெல்லி விவசாயிகள் போராட்டம், மீண்டும் அமைதி வழியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், அதை சீர்குலைக்கும் வேலைகளில் பாஜக ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டு என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேச அரசு தங்கள் மாநில எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளது.

விவசாயிகளை தாக்கும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் யார் ?

குடியரசு நாள் டிராக்டர் பேரணியின்போது பாஜக ஆதரவாளர்கள், நுழைந்து பேரணியில் நோக்கத்தை திசை திருப்பி விட்டனர். அதையடுத்து, தற்போது போராட்ட களத்தில் இருந்தே விவசாயிகளை அப்புறப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அரசின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத விவசாய சங்க்த்தினர் களத்தில் இருந்து ஒரு அடி கூட நகர மாட்டோம் என உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் திக்ரி கிராமத்தினர் என்கிற பெயரில் விவசாயிகளை மிரட்டும் வேலைகள் நடந்து வருகின்றன. விவசாயிகளின் போராட்டம் காரணமாக தங்களது வர்த்தகம் மற்றும் தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறி கிராமத்தினர் விவசாயிகளிடம் வாக்குவாதம் செய்வதாக கூறப்பட்டது. அதையடுத்து கைகலப்பும், போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசினர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

விவசாயிகளை தாக்கும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் யார் ?

போராட்டத்தை முன்னின்று நடத்தும் விவசாய சங்கத் தலைவர்கள் காவல்துறையில் ஆஜராக வேண்டும் என போலீசார் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நிராகரித்த விவசாய சங்கங்கள் ஒற்றுமையாக நின்று போராட்டத்தை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளன. விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், பேசுகையில், உயிரே போனாலும் போராட்ட களத்தை விட்டு நகர மாட்டோம் என்று கண்ணீர் மல்கக் கூறியது விவசாயிகளை மேலும் உணர்வுகளை தூண்டி விட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் மீண்டும் சாரைசாரையாக போராட்டக் களத்திற்கு வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார் பக்கமிருந்து கல்வீசி தாக்குதல் நடப்பதாகவும் கூறப்பட்டது. முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு கோஷமிட்டபடி வந்த சிலர், காவல்துறை முன்னிலையிலேயே, விவசாயிகள் தங்கியுள்ள கூராடங்களை சேதப்படுத்தி, தாக்குதலில் ஈடுபட்ட காட்சிகளை பார்க்க முடிந்தது. இந்த அடாவடியில் ஈடுபட்டது பாஜக குண்டர்கள் என விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்கள் கிடையாது. முகத்தை மறைத்துக் கொண்டு பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல் நிகழ்த்தியதாக கூறுகின்றனர்.

முகமூடி அணிந்தபடி தாக்குதல் நடத்துவது பாஜக ஆதரவாளர்களுக்கு புதிது இல்லை. அரசுக்கு எதிராக எந்த போராட்டம் என்றாலும், முகத்தை மூடிக்கொண்டு திட்டமிட்ட தாக்குதல் நடத்துவது பாஜகவினரின் வேலையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராடினர். அப்போது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபினர், முகமூடி அணிந்தபடி பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதுபோல, பல குறிப்பிடத்தக்க சம்பவங்களை எதிர்கட்சிகள் முன்வைக்கின்றன.

விவசாயிகளை தாக்கும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் யார் ?

சமீபத்தில் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதித்துறை இணையமைச்சர் அனுராக்சிங் தாகுர், போராடும் விவசாயிகளை தேச விரோதிகள் என்று குறிப்பிட்டதுடன், தேச விரோதிகளை ஒழிக்க வேண்டும், அடித்து விரட்ட வேண்டும், சுட்டுக் கொல்ல வேண்டும் என்கிற பொருள்பட ஆதரவாளர்களை உசுப்பி விட்டுள்ளார். பாஜகவினர் பலரும் இதே கருத்தைத் தான் போராடும் விவசாயிகள் மீது கொண்டுள்ளனர். அனுராக் ராகுர் எழுப்பிய கோஷம்தான் , விவசாயிகளை தாக்கிய கும்பலின் கோஷமாகவும் இருந்துள்ளது.

விவசாயிகள் அச்சத்தை போக்கி, அவர்கள் கோரிக்கைகளின் நியாயத்தை புரிந்து கொள்ளாத அரசு, தனது கட்சியினரை விட்டு விவசாயிகளை தாக்குவது ஜனநாயத்தை நெரிக்கும் செயல் என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

”விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவது முகமூடி அணிந்த மர்ம நபர்கள்” என்பதற்கு பின்னால் ஒளிந்து கொள்வதைவிட, மர்ம நபர்களை இயக்குவது யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் போராட்டம் என்ன ஆகும் என்பதற்கான விடைதான் இதுவரை தெரியவில்லை.