இரண்டு மடங்காக அதிகரித்த நிதிப் பற்றாக்குறை – எப்படி சமாளிப்பார் நிர்மலா சீதாராமன் ?

இரண்டு மடங்காக அதிகரித்த நிதிப் பற்றாக்குறை – எப்படி சமாளிப்பார்  நிர்மலா சீதாராமன் ?

நடப்பாண்டு பட்ஜெட்டில் எதிர்பார்த்த நிதிப் பற்றாக்குறை இலக்கை விட, அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கடும் நிதிச் சுமையை சந்தித்து வருகிறது. அதனால் வரும் நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மடங்காக அதிகரித்த நிதிப் பற்றாக்குறை – எப்படி சமாளிப்பார்  நிர்மலா சீதாராமன் ?

நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்பட்சத்தில் பொதுத்துறை பங்குகளை விற்கும் பணிகள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசு கடன் வாங்கும் அளவும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு (2020-21) மத்திய பட்ஜெட்டில் மொத்த வருவாய் ரூ.22.46 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த செலவு ரூ.30.42 லட்சம் கோடியாக இருந்தது. பட்ஜெட் பற்றாக்குறை ரூ.7.96 லட்சம் கோடியாகும்.

பற்றாகுறையை ஈடுகட்ட வாங்கப்படும் புதிய கடன்கள் ரூ.7.96 லட்சம் கோடி என்றும், பழைய கடன்களுக்கான வட்டி செலவு ரூ.7.08 லட்சம் கோடியாகவும் இருந்தது. அதாவது பழைய கடன்களுக்கான வட்டி செலவுகளுக்கு இணையாக புதிதாக கடன் வாங்கி இந்தியா வட்டி கட்டி வருகிறது.

இரண்டு மடங்காக அதிகரித்த நிதிப் பற்றாக்குறை – எப்படி சமாளிப்பார்  நிர்மலா சீதாராமன் ?

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த கடன் சுமை சுமார் ரூ.107 லட்சம் கோடியாக இருந்தது. பற்றாக்குறையின் அளவு திட்டமிட்டபடி ரூ.7.96 லட்சம் கோடியை விட இரு மடங்கு அதிகரித்து சுமார் ரூ.15 லட்சம் கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பற்றாக்குறை அதிகரிப்பின் காரணமாக, கடன் வாங்கும் அளவு அதிகரிப்பதும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதும் வேகமாக நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.