கட்சி தொடங்கும் லதா: ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி

 

கட்சி தொடங்கும் லதா: ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி

கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்த தினத்தில், அர்ஜூனமூர்த்தி -தமிழருவி மணியன் ஆகியோருக்கு என்னென்ன பொறுப்பு என்பதை அறிவிக்க இருந்த ரஜினிகாந்த், அர்ஜூனமூர்த்திக்கு என்ன பொறுப்பு என்று அவரிடமே கேட்டு தடுமாறினார்.

கட்சி தொடங்கும் லதா: ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி

ஏன் இப்படி ரஜினி தடுமாறுகிறார் என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் கட்சி தொடங்குவது குறித்து எந்த தகவலும் ரஜினிக்கே தெரியவிலை. அவருக்கே இன்றைக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கட்சி தொடங்குவதின் பின்னணியில் லதா ரஜினிகாந்த் இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. திருப்பதியில் குருமூர்த்தியுடன் லதா ஆலோசனை நடத்தியதாவும் செய்திகள் பரவின.

கட்சி தொடங்கும் லதா: ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி

இந்த சூழ்நிலையில்தான் கொரோனாவையும், உடல்நிலையையினையும் காரணம் காட்டி கட்சி தொடங்கும் முடிவில் இருந்து ரஜினி பின்வாங்கிவிட்டார். ரஜினியின் இந்த முடிவுக்கு பின்னர் தமிழருவின் மணியனும் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்தார். ஆனால் மறுவாரமே அவர் பழையபடி காந்திய மக்கள் இயக்கத்தினருடன் இணைந்து பணியாற்ற தொடங்கிவிட்டார்.

ரஜினி ரசிகர்களை விருப்பப்பட்ட கட்சியில் இணைந்துகொள்ளலாம் என்று ரஜினி மன்றமும் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் திமுகவில் பெருமளவில் இணைந்துவிட்டனர்.

கட்சி தொடங்கும் லதா: ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி

இந்நிலையில் அர்ஜூனமூர்த்தி, தான் தனிகட்சி தொடங்கப்போவதாகவும், அதில் ரஜினி ரசிகர்களும் இணைந்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்த கட்சியில் ரஜினியின் பெயரையோ, அவரது போட்டோவையோ பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோவிலுக்கு சென்று, பூஜை செய்து விட்டு வந்திருக்கிறார். தனது அம்மா லதா தொடங்கவிருக்கும் அரசியல் கட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் சவுந்தர்யா பூஜை செய்ததாக தகவல் கசிகிறது. லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதைத்தான் அர்ஜூன மூர்த்தி அறிவித்திருக்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.,

கட்சி தொடங்கும் லதா: ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி

தனது விருப்பம் இல்லாமல் தன் மனைவி கட்சி தொடங்குவதால் ரஜினிகாந்த் கோபித்துக்கொண்டு, பெங்களூருக்கு சென்றவர், 10 நாட்களுக்கு மேல் அங்கேயே தங்கி இருப்பதாகவும் தகவல்.