ராமதாஸ் விமர்சிக்க, விமர்சிக்க… ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை

 

ராமதாஸ் விமர்சிக்க, விமர்சிக்க… ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை

அதிமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 1,110 பேர் நேற்று திமுகவில் இணைந்தனர். இதில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து மணிவர்மா தலைமையில் பாமகவில் இருந்து 500 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். பண்ருட்டி பெரிய காட்டுப்பாளையம் பாமகவிலிருந்து ஒன்றிய துணை செயலாளர் எ.சின்னதம்பி தலைமையில் 90 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.

ராமதாஸ் விமர்சிக்க, விமர்சிக்க… ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா . ராஜேந்திரன் தலைமையில் நெய்வேலி தொ.மு.ச. அலுவலக வளாகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி வாயிலாக பேசியபோது, பாமக ராமதாசுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்.

‘’வன்னியர் சமுதாயம் திமுக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. இருபது சதவிகித இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோ சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இட ஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் உதவித்தொகையையும் கொடுத்தது திமுகதான்’’என்று ராமதாசுக்கு பதிலடி கொடுத்தார்.

ராமதாஸ் விமர்சிக்க, விமர்சிக்க… ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை

மேலும், ‘’தமிழகத்தில் முதன் முதலில் டிஜிபியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை நியமித்த கட்சி திமுக. தமிழ்நாஅடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேந்தவரை நியமித்ததும் திமுக ஆட்சிதான்.

சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை நியமித்ததும் திமுக ஆட்சிதான்.
ஆனால் ராமதாஸ், சொந்த ஆதாயத்திற்காக சுய நலத்திற்காக திமுக , வன்னியர் சமுதாயத்திற்கு செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரச்சாரம் செய்துவருகிறார்’’என்றும் குற்றம்சாட்டினார்.

இதன்பின்னர், ‘’ராமதாசின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் பாமகவில் இருந்தவர்கள் விலகி, திமுகவில் இணைகிறார்கள். ராமதாஸ் திமுகவை பற்றி விமர்சிக்க, விமர்சிக்க அக்கட்சியில் இருந்து விலகி திமுகவை நோக்கி அதிகமாக வரப்போகிறார்கள் பாட்டாளிகள். இதில் சந்தேகமே இல்லை’’ என்று எச்சரித்தார்.