சீனியரை எழுப்பிவிட்டு ராஜீவ்காந்தியை உட்காரவைக்கும் ஸ்டாலின்

 

சீனியரை எழுப்பிவிட்டு ராஜீவ்காந்தியை உட்காரவைக்கும் ஸ்டாலின்

இனியும் பகுத்தறிவு பேசிக்கொண்டிருந்தால் பரணில் ஏறி படுத்து தூங்க வேண்டியது தான் என்பதை உணர்ந்த ஸ்டாலின் முருகன் வேலை கையில் எடுத்திருக்கிறார்.

இந்த நேரத்தில் திராவிடம் பேசாமல் நாத்திகம் பேசாமல் தமிழர்களுக்கு தகுந்த மாதிரி பேசி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஸ்டாலின். அதனால் தான் திமுக சிறப்பு பேச்சாளர்களுக்கு இதையே அறிவுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து இருக்கும் ராஜீவ்காந்திக்கு முக்கிய இடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். ராஜீவ்காந்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடம் தமிழன் பிரசன்னா இடம் என்கிறார்கள்.

சீனியரை எழுப்பிவிட்டு ராஜீவ்காந்தியை உட்காரவைக்கும் ஸ்டாலின்

திமுகவில் செய்தி தொடர்பு இணை செயலாளராக இருக்கும் தமிழன் பிரசன்னா திமுகவின் நட்சத்திர பேச்சாளரும் ஆவார். குறுகிய காலத்திலேயே இளம்வயதிலேயே திமுகவில் முக்கிய இடத்திற்கு வந்தவர் தமிழன் பிரசன்னா. இதனால் சீனியர்கள் பலரும் அவர் மேல் புகைச்சலில் இருந்தனர். தமிழன் பிரசன்னா மிகத் துடிப்புடன் திராவிட இயக்கக் கொள்கைகளை தொலைக்காட்சி விவாதங்களில் பேசக்கூடியவர். திமுக மேடைகளிலும் திராவிட இயக்கக் கொள்கைகளை ஆவேசமாக எடுத்து பேசக்கூடியவர். ஆனாலும் சில நேரங்களில் இது மக்களுக்கு எரிச்சலடைய வைக்கிறது என்று தெரியாமலேயே அவர் பேசிவருவது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார்.

சீனியரை எழுப்பிவிட்டு ராஜீவ்காந்தியை உட்காரவைக்கும் ஸ்டாலின்

கடந்த ஆண்டு பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை வாங்கிக் கட்டிக்கொண்டார் தமிழன் பிரசன்னா. இதே மாதிரி ஏகப்பட்ட விஷயங்களில் குளறுபடி செய்து திமுகவிற்கு கெட்ட பெயரை அதிகம் சம்பாதித்து கொடுத்திருக்கிறார் தமிழன் பிரசன்னா என்று சீனியர்கள் பலரும் அதிருப்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் ஸ்டாலின் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

சீனியரை எழுப்பிவிட்டு ராஜீவ்காந்தியை உட்காரவைக்கும் ஸ்டாலின்

திமுகவில் தமிழன் பிரசன்னாவிற்கு உள்ள முக்கியத்துவத்தை இனி ராஜீவ்காந்திக்கு கொடுக்க முன்வந்திருக்கிறார். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார் ஸ்டாலின். இனி பிரசன்னாவை பொதுக்கூட்டங்களில் பேச அழைப்பதை விட ராஜீவ்காந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக கூட்டங்களுக்கு அழைத்து பேசவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். பிறரின் மனம் புண்படாதபடி, பொதுமக்கள் எவரும் முகம் சுளிக்காதபடி, சொல்ல வேண்டிய விசயத்தை மிகவும் பக்குவமாக தெளிவாக எடுத்துக் பேசக்கூடியவர் ராஜீவ்காந்தி என்று பலரும் சொல்ல கேட்டதால் ஸ்டாலின் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள் திமுக சீனியர்கள்.

சீனியரை எழுப்பிவிட்டு ராஜீவ்காந்தியை உட்காரவைக்கும் ஸ்டாலின்

எதிர்க்கட்சியினரை கடந்த காலங்களில் அதிகமாகவே அநாகரிகமாக பேசியிருக்கிறார் தமிழன் பிரசன்னா. இதனால், திமுகவின் லட்சணத்தை பாருங்கள் என்று தமிழன் பிரசன்னாவின் கடந்த கால பேச்சுக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், இதில், தேர்தல் நேரத்தில் இன்னும் அவர் பேசி, அப்படி ஒரு கெட்ட பெயர் திமுகவிற்கு வரக் கூடாது என்பதாலும் ஸ்டாலின் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம்.