கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… தமிழகத்தில் 20,768 பேர் புதிதாக பாதிப்பு!

 

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… தமிழகத்தில் 20,768 பேர் புதிதாக பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர சுகாதாரத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. கட்டுப்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரவு நேர முழு ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. கோவில்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… தமிழகத்தில் 20,768 பேர் புதிதாக பாதிப்பு!

இவ்வாறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலிலும் பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. வட மாநிலங்களில் பரவி வரும் அளவுக்கு கொரோனா பாதிப்பு தீவிரமாக இல்லையென்றாலும் கொரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 20,768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் 17,576 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாகவும் 1,20,444 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.