முருகன், அண்ணாமலையின் காவடியாட்டம்; வைரலாகும் வீடியோ

 

முருகன், அண்ணாமலையின் காவடியாட்டம்; வைரலாகும் வீடியோ

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முருகன்கோவில்களில் வழிபாடு நடைபெற்றுவருகிறது. தைப்பூசம் திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி, மாநில துணை தலைவர் அண்ணாமலை, மாநில பொது செயலாளர் செல்வகுமார் ஆகியோர் பழனி தேரடியிலிருந்து கோவில் வரை காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.

முருகன், அண்ணாமலையின் காவடியாட்டம்; வைரலாகும் வீடியோ

சுற்றி நின்று அரோகரா அரோரகா என்று சொல்லி, முருகனின் பாடலைப்பாட, எல். முருகன் மற்றும் அண்ணாமலை இருவரும் காவடி ஆட்டம் ஆடினர்.

இதுகுறித்து அண்ணாமலை,

’’சமயம் எதிர்க்கும் எதிரிகள் கூட்டம்
அதை தகர்த்து எறியும் தமிழர் வீரம்
நம்மை காக்கும் முருகனை தொழு து
காவடி தூக்கும் மக்கள் இங்கு

ஆறுமுகன் தமிழர் வேதனை அறுப்பான்
வேறுமுகம் கொண்டு தீயோரை வதைப்பான்
பேசும் தமிழ் கொண்டு வீரம் வளர்ப்பான்
ஏறுமுகம் இனி நம் தமிழருக்கே’’என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இறைவனுக்கு ஒரு முக்கியமான சந்தர்ப்பமான தைப் பூசம் நிகழ்வில். எங்கள் காவடியுடன் எங்கள் இறைவன் பாலா தண்டயுதபாணியின் ஆசீர்வாதங்களை எடுக்க பழனி மலையை நோக்கி மலையேறினோம். தமிழ் மக்களின் மற்றும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக அவரது ஆசீர்வாதத்தை நாங்கள் பெற்றோம்.
வீரவேல் வெற்றிவேல்! என்று தெரிவித்திருக்கிறார்.

முருகன், அண்ணாமலையில் காவடி ஆட்டம் வீடியோ இணையங்களில் வைரலாகிறது.