நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

 

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது. மாலை 4.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
பிப்ரவரி 2ம் தேதி சட்டமன்ற பேரவை கூட்டம் கூடும் நிலையில் நாளை அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

பிப்ரவரி 2-ம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. இவ்வாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இக்கூட்டத்தொடர் தொடங்கும்.

பிப்ரவரி 2ம் தொடங்கும் கூட்டத்தொடரினை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.,

ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம், சசிகலா விடுதலை, கூட்டணி, எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டு என்று ஏகப்பட்ட நெருக்கடியான நிலையில் நாளை அமைச்சரவை கூடுவதால் பரபரப்பு எழுந்திருக்கிறது.