அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறதா தேமுதிக ?

 

அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறதா தேமுதிக ?

அதிமுக கூட்டணியில் இடம்பெற உள்ள கட்சிகள் எவை என்பதும் இன்னமும் இறுதி செய்யப்படாத நிலை நீடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதிலும் முக்கியமான அதிமுக கூட்டணி வண்டியில் தேமுதிக இடம்பெறாது என்பதற்கான சமிக்கைகள் இப்போதே தெரிவதாக சொல்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறதா தேமுதிக ?

அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இடம் பெறும் என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று , தேர்தலை சந்திப்பதில் பாஜக தமிழக தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என்பது பல நேரங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த விஷயத்தில் இறுதி முடிவாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி விளக்கம் அளித்த பின்னரும், தமிழக பாஜக முன்னால் தலைவர் இல.கணேசன் போன்றோர் இன்னும் சசிகலா ஆதரவு மனநிலையிலேயே உள்ளனர். சசிகலா வருகைக்கு பின்னர் கூட்டணியை இறுதி செய்யலாம் என்கிற முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதே நிலையில்தான் பாமகவும் உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்தாலும், 20 சதவீத இடஒதுக்கீடு காரணம் காட்டி அதிமுகவுக்கு பாமக நெருக்கடி அளித்து வருகிறது. பாமகவுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, எத்தனை இடம் என்பது முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்கிற குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. வட மாவட்டங்களிலும், சேலம் மாவட்டத்திலும் பாமக கேட்டுள்ள தொகுதிகளை அப்படியே அளிக்க வேண்டும் என்பதுதான் பாமக அளித்து வரும் அழுத்தம். ஆனால் அதற்கு எடப்பாடி தரப்பு சம்மதிக்கவில்லை. அமைச்சர்கள் தங்கமணி ,வேலுமணி ஆகியோர் தைலாபுரம் வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படியும் ராமதாஸ் இறங்கி வரவில்லையாம். இதையடுத்து கூட்டணி இழுபறியில் உள்ள நிலையில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை மாத கடைசிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அதேபோல முதல்வர் வேட்பாளர் விஷயத்திலும் எடப்பாடியை ஏற்றுக்கொண்டு , தேர்தல் வேலைகளை செய்வதில் ராமதாஸ்க்கு விருப்பம் இல்லையாம். இதெற்கெல்லாம் காரணம் சசிகலா வந்தால் அதிமுக தலைமை மாற்றம் எப்படி இருக்கும் என்பதை கவனிக்கலாம் என்பதுதான் யோசனை.

அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறதா தேமுதிக ?

கூட்டணியில் இருக்கும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் கருணாஸ், தனது நிலையை தெளிவாகவே அறிவித்து விட்டார். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டேன். இந்த முறையும் வாய்ப்பு அளித்தால் போட்டியிடுவேன் என கூறியுள்ளதுடன், சசிகலா வருகைக்கு பின்னரே தனது அரசியல் நிலைபாடு இருக்கும் என தெளிவுபடுத்தி உள்ளார். இதையடுத்து சசிகலா வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார் என்று சொல்லி விட்டார்.

அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறதா தேமுதிக ?

கூட்டணியில் மற்றொரு கட்சியான தேமுதிகவுக்கு இந்த தேர்தல் சவாலானதாக இருக்க உள்ளது. சமீப காலமாக சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை பிரேமலதா விஜயகாந்த எடுத்துள்ளது அதிமுக இரட்டை தலைமை ரசிக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்போதே தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட அதிமுக முடிவு எடுத்தது. எனிலும் இடைத்தேர்தல் பயம் காரணமாக தேமுதிக தயவினை அதிமுக பயன்படுத்திக் கொண்டது. ஆனால், இந்த முறை, பாமகவை கூட்டணிக்கு வைத்தால், தேமுதிக தேவையில்லை என்கிற முடிவில் அதிமுக உள்ளது. அதனால்தான் இதுவரை தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை பேசப்படவில்லை. இந்த வருத்தத்தில்தான் பிரேமலதா விஜயகாந்த், சசிகவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படுகிறதா தேமுதிக ?

சசிகலா வருகையை எதிர்பார்ப்பதாகவும், எனது ஆதரவு எப்போதும் உண்டு என பிரேமலதா கூறியுள்ளார். இதன் மூலம், தற்போதைய தலைமைமீது அதிருப்தியில் உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. இந்த சூழலில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய சொந்த கட்சி பிரமுகரை, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அதிமுக தலைமை நீக்கியுள்ளது. இவற்றையெல்லாம் வைத்து பார்த்தால், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கழற்றி விடப்படும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

சசிகலா வருகையை எதிர்பார்ப்பதும், தற்போதைய தலைமை மீது மாற்றுக் கருத்தும் கொண்டுள்ள கூட்டணி கட்சிகளை வைத்துக் கொண்டு அதிமுக எப்படித்தான் சமாளிக்கப்போகிறதோ ? என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.