பட்ஜெட்க்கு முன் வீழ்ச்சி காணும் பங்குச் சந்தைகள்!

 

பட்ஜெட்க்கு முன் வீழ்ச்சி காணும் பங்குச் சந்தைகள்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. தொடர்ச்சியாக 4 வது நாளாக பங்குச் சந்தைகளில் இறக்கமான போக்கு காணப்படுகிறது. இன்றைய தினசரி வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டன.

பட்ஜெட்க்கு முன் வீழ்ச்சி காணும் பங்குச் சந்தைகள்!

கடந்த சில நாட்களாக மிக வேகமாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை, இதுவரை இல்லாத புதிய உச்சமாக சென்செக்ஸ் 50 ஆயிம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமானது. இந்த நிலையில் , இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து சரிவைக் கண்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் சென்செக்ஸ் சுமார் 2500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

இன்றைய தினசரி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 47,278 புள்ளிகள் வரை சரிந்து, வர்த்தக நேர முடிவில், ரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து வர்த்தகமானது வர்த்தக நேர முடிவில் 47409 புள்ளிகளில் முடிவடைந்தது. இன்றைய தினசரி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 937 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 271 புள்ளிகள் சரிந்து 13967 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

வருகிற மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சாதகமான அம்சங்கள் இருக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், நடப்பு பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, பட்ஜெட் அறிவிப்பில் வரி விதிப்பு மாற்றங்கள் இருக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாக சந்தையில் நுகர்வு தேவைகளில் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்படுவதால், பங்குச் சந்தைகளில் தாக்கல் ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்க்கு முன் வீழ்ச்சி காணும் பங்குச் சந்தைகள்!

முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியெறி, தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதால் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய வர்த்தகத்தில் வங்கித் துறை பங்குகளின் வீழ்ச்சி அதிகமாக இருந்தது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த பங்குகளில் 1053 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆதயத்தை அளித்துள்ளன. 1089 பங்குகள் வீழ்ச்சி கண்டன. 141 பங்குகள் எந்த மாற்றமுமில்லாமல் வர்த்தகமாகின. ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் அதிக இழப்பை அளித்தன. டெக் மஹிந்திரா, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், விப்ரோ, ஐடிசி, பவர்கிரிட் உள்ளிட்ட பங்குகள் ஆதாயத்தை கொடுத்துள்ளன.

மத்திய பட்ஜெட்டில் அந்நிய முதலீடுகளை திரட்டுவதற்கான அதிக சலுகைகள் இருக்கும் என்பதால், பட்ஜெட் அறிவிப்பை பொறுத்து முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் மாற்றம் பெறலாம் என கூறப்படுகிறது. அதையடுத்து பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.