மனமிறங்காத திமுக தலைமை – சமாளிக்க முடியாமல் திணறும் மாவட்ட நிர்வாகிகள்!

 

மனமிறங்காத திமுக தலைமை  – சமாளிக்க முடியாமல் திணறும் மாவட்ட நிர்வாகிகள்!

திமுக தலைவர் ஸ்டாலினின் புதிய பிரச்சார அறிவிப்பு, அந்த கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘’ தேர்தலுக்குள் டீ, காபிக்குக் கூட யாரிடமாவது கையேந்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என புலம்புகிறார்கள் இவர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி முதல் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற பிரச்சார பயணத்தை ஸ்டாலின் தொடங்க இருக்கிறார். 30 நாட்களில் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் செல்லவிருக்கும் அவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற இருக்கிறார். தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் நூறு நாட்களில் இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என கூறியுள்ளார்.

தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி அமையுமா, அப்படியே அமைந்தாலும் பல லட்சம் மக்களின் பிரச்சனைகளுக்கு நூறு நாட்களில் தீர்வுகாண முடியுமா? என்கிற நியாயமான சந்தேகங்கள் இதில் உள்ளன. இதுபோக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண செயல்பட்டுவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர்கள் நடத்திவரும் வாராந்திர கூட்டங்கள் இனி என்னவாகும் என்கிற கேள்விகளும் எழுகின்றன. பொதுவான இத்தகைய பிரச்சனைகள் தவிர, ஸ்டாலினின் இந்த திடீர் அறிவிப்பால் திமுகவினர் நொந்து நூலாகியுள்ளனர்.

மனமிறங்காத திமுக தலைமை  – சமாளிக்க முடியாமல் திணறும் மாவட்ட நிர்வாகிகள்!

’’கட்சிக்காக செலவு பண்ண வேண்டியதுதான். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை தலைமை எப்போது புரிந்துகொள்ள போகிறதோ!’’ என புலம்புகிறார்கள் மாவட்டத்தில். இது பற்றி ஒரு மாவட்ட செயலாளர் கூறுகையில்,

‘’ என்றைக்கு ஸ்டாலின் தலைவர் பதவியில் அமர்ந்தாரோ அன்றிலிருந்து எங்களுக்கு செலவுக்கணக்கு ஆரம்பித்துவிட்டது. சென்ற ஆண்டில் கொரோனா நிவாரணம், இணையவழி உறுப்பினர் சேர்க்கை, விடியலை நோக்கி….ஸ்டாலினின் குரல், மக்கள் கிராமசபை, கனிமொழி, உதயநிதி பிரச்சாரம் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இதில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தலைமையிடமிருந்து தம்பிடி காசு வரவில்லை. இருக்கிற கொஞ்ச பேர் கைக்காசையும், இல்லாத பெரும்பாலானவங்க கடனை வாங்கியும் சமாளித்தோம். அதேநேரம் எதிர் தரப்பில் ஒரு சின்ன நிகழ்ச்சியில் தொடங்கி எடப்பாடி பிரச்சாரம் வரை எல்லாவற்றையும் லோக்கல் அமைச்சர்களும், தலைமையும் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் எங்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

மனமிறங்காத திமுக தலைமை  – சமாளிக்க முடியாமல் திணறும் மாவட்ட நிர்வாகிகள்!

234 தொகுதிகளுக்கும் ஸ்டாலின் வரப்போறாராம். கூட்ட ஏற்பாடு, ஆட்களை திரட்டுவது என ஏகப்பட்ட செலவுகள் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து ஒன்றிரண்டு மாவட்ட செயலாளர்களை தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் இப்ப ஓட்டாண்டியாகத்தான் இருக்கிறாங்க. இவர்கள் தலை மீதே மீண்டும் மீண்டும் சுமையை இறக்கி வைப்பது எப்படி சரியாகும்? தலைமையிடம் பணம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அங்கு கருப்பிலும், வெள்ளையிலும் கோடிகோடியாக இருக்கிறதே. அதை செலவழிக்க மனமில்லாதவர்கள் எங்களை இந்த பாடு படுத்துகிறார்களே! கள எதார்த்தத்தையும், காலத்தின் தேவையையும் உணர்ந்து பண விஷயத்தில் நீக்குபோக்காக நடந்துகொள்ளாவிட்டால் இந்த முறையும் கஷ்டம்தான்’’ என்றார். உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி!