கட்சியை கட்டிக்காத்த இரட்டையர்கள்- நெகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !

 

கட்சியை கட்டிக்காத்த இரட்டையர்கள்- நெகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்குப் பின்னர் அமைந்த இபிஎஸ் – ஓபிஎஸ் என்கிற இரட்டை தலைமை, எவ்வளவு வலிமையாக செயல்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக தொண்டர்கள் பெருமைப்படுகின்றனர்.

கட்சியை கட்டிக்காத்த இரட்டையர்கள்- நெகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !

திமுக போன்று, அதிமுகவில் தந்தை, மகன், பேரன் என தலைமை பதவிக்கு தயார் செய்யும் வாய்ப்பில்லாத கட்சி அதிமுக. எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா, அவரின் மறைவுக்குப் பின்னர், கட்சியில் தலைமை பதவிக்கு ஜனநாயக முறையில் போட்டி ஏற்பட்டது. ஆனால், ‘இயக்கமே முதன்மை, இயக்கத்தின் நலனை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற லட்சியத்தை கொண்ட நிர்வாகிகளால் தலைமை மாற்றம் ஜனநாயக முறைப்படி நடந்தது.

ஜெயலலிதாவும் அப்படி வந்தவர்தான். அவருக்குப் பின்னர் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும், கட்சியின் தலைமை பொறுப்பில் அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின்னர், இருவரும் இணைந்து ஆட்சியையும், கட்சியையும் பொறுப்பாக வழி நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா அமைத்து கொடுத்துச் சென்ற ஆட்சி பொறுப்பை, முதலமைச்சர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஏற்று செயல்பட்டு வருகிறார் என்றால், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடியுடன் இணைந்து பணியாற்றி அதிமுகவைக் கட்டிக்காத்து வருகிறார்.

கட்சியில் பதவி நியமனம், தேர்தல் தொடர்பான ஆலோசனை, வியூகங்கள், கூட்டணி முடிவுகள் என எந்த ஒரு விஷயமானாலும் இருவரும் சேர்ந்தே செயல்படுகின்றனர். அதிலும், அரசு மற்றும் கட்சி சார்ந்த முக்கிய நிகழ்வுகளில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வருகையை உறுதிப்படுத்திய பின்னரே, அந்த நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

கட்சியை கட்டிக்காத்த இரட்டையர்கள்- நெகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !

“மொத்தம் 3 முறை முதல்வர் பதவியை ஓபிஎஸ் அலங்கரித்தப் போதிலும், முதல்வர் பதவிக்கு பன்னீர் தன்னை முன் மொழிந்த பெருந்தன்மை எடப்பாடியை ரொம்பவே நெகிழ வைத்தது. அப்போதிருந்து ஓபிஎஸ் மீதான மரியாதையும் அன்பும் எடப்பாடிக்கு அதிகமாகி விட்டது” என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள். அதேபோன்று ஓபிஎஸ்ஸும் தன் பங்குக்கு கட்சியினர் மத்தியில் பேசும் போதெல்லாம், “கட்சியில், அண்ணன் – தம்பி பிரச்னைகள் இருந்தாலும், அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தி.மு.க என்னும் தீய சக்தியை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்று கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறார்.

கட்சியை கட்டிக்காத்த இரட்டையர்கள்- நெகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் !

இந்த நிலையில்தான், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதுமிருந்து அதிமுகவினரும், பொதுமக்களும் சென்னை வந்துள்ளனர். தீவுத் திடலில் இருந்து மெரினா வரை லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திருவிழா கூட்டம் போல் திரண்டுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக காணாமல் போய் விடும் என பேசி திரிந்து, மனப்பால் குடித்து வந்த திமுகவினருக்கும்,மு.க. ஸ்டாலினுக்கும் விழுந்த சம்மட்டி அடியாகவே ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளது என அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக பேசிக் கொள்கின்றனர்.