கொடுந்தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது; உண்மையான தேசத்துரோகிகளை உலகம் உணர்ந்துகொள்ளட்டும்… வெடிக்கும் சீமான்

கொடுந்தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது; உண்மையான தேசத்துரோகிகளை உலகம் உணர்ந்துகொள்ளட்டும்… வெடிக்கும் சீமான்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கட்ந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் இன்னொரு வடிவமாக இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி வன்முறையாக வெடித்தது. வன்முறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கொடுந்தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது; உண்மையான தேசத்துரோகிகளை உலகம் உணர்ந்துகொள்ளட்டும்… வெடிக்கும் சீமான்

இந்த விவகாரம் குறித்து, மத்தியில் ஆளும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் வாகனப்பேரணியில் காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அவர் மேலும், மக்களாட்சி நாடாகப் பேரறிவிப்புச் செய்யப்பட்ட இந்நாளில், மக்கள் மீதே அரச வன்முறையையும், கொடுந்தாக்குதலையும் நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது என்கிறார்.

கொடுந்தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது; உண்மையான தேசத்துரோகிகளை உலகம் உணர்ந்துகொள்ளட்டும்… வெடிக்கும் சீமான்

விவசாய நாடு என அண்ணல் காந்தியடிகளால் கொண்டாடப்பட்ட இந்நாட்டில், குடியரசு தினம் நாடெங்கும் நினைவுகூறப்படுகிற இவ்வேளையில் விவசாயப் பெருங்குடிகள் மீது ஏவப்படும் அரசப்பயங்கரவாதத்தின் மூலம் சர்வதேசச் சமூகத்தின் முன்பு இந்தியா, அவமானத்தின் சின்னமாய் மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும்,

கொடுந்தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது; உண்மையான தேசத்துரோகிகளை உலகம் உணர்ந்துகொள்ளட்டும்… வெடிக்கும் சீமான்

சொந்த நாட்டின் குடிகளையே துளியும் மதித்திடாதப் போக்கின் மூலம் நாட்டைத் தலைகுனியச் செய்து விவசாயிகளை நிலைகுலையச் செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள்தான் உண்மையான தேசத்துரோகிகள் என்பதை உலகம் உணர்ந்துகொள்ளட்டும் என்கிற சீமானின் வார்த்தைகளில் பெருங்கோபம் தெரிகிறது.