எஸ்.பி.பி. கடைசியாக பாடிய ‘என்னோட பாஷா பாடல்…’ -எச்.ராஜா உருக்கம்

 

எஸ்.பி.பி.  கடைசியாக பாடிய ‘என்னோட பாஷா பாடல்…’ -எச்.ராஜா உருக்கம்

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது மத்திய அரசு. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எஸ்.பி.பி.  கடைசியாக பாடிய ‘என்னோட பாஷா பாடல்…’ -எச்.ராஜா உருக்கம்

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 10 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பாஜகவின் முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, ‘’தமிழகம் மற்றும் பாண்டியிலிருந்து 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி’’ என்று தெரிவித்திருக்கிறார்.

எஸ்.பி.பி.  கடைசியாக பாடிய ‘என்னோட பாஷா பாடல்…’ -எச்.ராஜா உருக்கம்

அவர் மேலும், திரு. SPB அவர்கள் கடைசியாக பாடிய ’என்னோட பாஷா’ பாடல் பகிர்வதும், அவருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதும் மகிழ்ச்சி. அவரது கலைத்துறையின் சேவையை போற்றும் தருணமிது. காட்சிகள் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது நண்பர் @rgkrishnan31
அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.