மூன்று நாட்களாக என் கண்ணீர் துளி….யானை எடையில்! வலியை வெளிப்படுத்திய பார்த்திபன்

 

மூன்று நாட்களாக என் கண்ணீர் துளி….யானை எடையில்!  வலியை வெளிப்படுத்திய பார்த்திபன்

மூன்று நாட்களாக என் கண்ணீர் துளி….யானை எடையில்! என்று தனக்கு ஏற்பட்ட வலியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஆர். பார்த்திபன்.

மூன்று நாட்களாக என் கண்ணீர் துளி….யானை எடையில்!  வலியை வெளிப்படுத்திய பார்த்திபன்

மசினக்குடியில் யானை தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுக்கின்றன. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாத்(36) மற்றும் ரேமண்ட் டீன் (28) இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். சம்மந்தப்பட்ட தனியார் ரிசார்ட்டுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுத்தி, #ElephantDeath என்ற ஹேஷ்டேக் மூலமாக தங்களது கண்டனங்களை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

’’காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது’’என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மூன்று நாட்களாக என் கண்ணீர் துளி….யானை எடையில்!  வலியை வெளிப்படுத்திய பார்த்திபன்

தீ வைத்து கொளுத்தப்பட்டதால் 40 லிட்டர் ரத்தம் உடலில் இருந்து வெளியே சோர்ந்து போன யானையை மிகவும் போராடி சிகிச்சையைளிக்க லாரியில் ஏற்றியபோது, அதன் துதிக்கை லாரியின் பக்கவாட்டில் சோர்ந்து கிடந்தது. அப்போது அந்த யானைக்கு ஏற்பட்ட நிலைமையை கண்டு, யானையின் வலியை உணர்ந்து வன அலுவலர் அந்த யானையின் துதிக்கையை பிடித்து தேம்பித்தேம்பி அழுத வீடியோ வைரலாகி உலகம் முழுவதும் பலரையும் உருகவைத்தது. இதில் மனித நேயமிக்க கலைஞன் பார்த்திபனுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

’’மனிதம் வளர்ப்போம்,
விலங்குகளிடமும்…
மனிதம் மீது நம்பிக்கை இழந்த ஒரு தும்பிக்கை லாரியின் வெளிபுறம் துவண்டுக் கிடக்க,அதை அந்த வனத்துறை காவலர் இறுகப் பற்றி அழும் போது….
மூன்று நாட்களாக என் கண்ணீர் துளி….
யானை எடையில்!!!!! என்று தனக்கு ஏற்பட்ட வலியை வெளிப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன்.