ராமதாசின் திடீர் பாசம்.. திகைப்பில் டாக்டர்!

 

ராமதாசின் திடீர் பாசம்.. திகைப்பில் டாக்டர்!

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டு என்று கோரி, கடந்த டிசம்பர் 1ம் தேதியில் இருந்து பாமக போராட்டங்களை நடத்தி வருகிறது.

ராமதாசின் திடீர் பாசம்.. திகைப்பில் டாக்டர்!

இதுவரைக்கும் ஐந்து கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கும் பாமக வரும் 29 அன்று இறுதிக்கட்ட போராட்டத்தினை அறிவித்திருக்கிறது. அதன்பிறகும் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு அறிவிக்காவிட்டால் ராமதாஸ் நேரடியாக போராட்டத்தில் இறங்குவார் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார். இதுவரைக்கும் அறவழியில் அமைதியாக போராடினோம்… என்று ஒரு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் ஜி.கே.மணி.

ராமதாசின் திடீர் பாசம்.. திகைப்பில் டாக்டர்!

இந்நிலையில், டிசம்பர் ஒன்றாம் தேதி என்று ‘’கல்வி – வேலைகள் மட்டுமல்ல, அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் பங்கிட்டுத் தரப்பட வேண்டும்!

வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தார்மீக ஆதரவு!!’’ என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் டுவிட்டை இன்றைக்கு ரீ டுவீட் செய்து, அதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.

’’வன்னியர்களின் உணர்வுகளையும், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களையும் புரிந்து கொண்டு ஆதரவளிக்கும் உங்களுக்கு நன்றி!’’ என்று தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.

எப்போதோ சொன்ன ஆதரவுக்கு இப்போது நன்றி சொல்வது ஏன்? டாக்டர் கிருஷ்ணசாமி மீது ராமதாசுக்கு ஏன் இந்த திடீர்ப்பாசம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. டாக்டர் ஆதரவாளர்களும் திகைப்பில் இருக்கிறார்கள்.