பி.கே. சொன்ன பாயிண்ட்… கமல் விவகாரத்தில் ஒதுங்கிக்கொண்ட ஸ்டாலின்!

 

பி.கே. சொன்ன பாயிண்ட்… கமல் விவகாரத்தில் ஒதுங்கிக்கொண்ட ஸ்டாலின்!

கமல்ஹாசனோடு கூட்டணி பேசினார் உதயநிதி ஸ்டாலின் என்று ஆரம்பகட்டத்தில் பேச்சு இருந்தாலும் அதன் பின்னர் அதுபற்றிய தகவல் எதுவும் இல்லை.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இருக்க, கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினும் தீவிரமாகிவிட்டார்.

பி.கே. சொன்ன பாயிண்ட்… கமல் விவகாரத்தில் ஒதுங்கிக்கொண்ட ஸ்டாலின்!

ராகுலின் வருகைக்கு பின்னர் தற்போதுதான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. ராகுலின் வருகைக்கு முன்னரே, கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அழைத்தார்.

இதனால், திமுக கூட்டணிக்குள் கமலை இழுக்கிறது காங்கிரஸ் என்ற விமர்சனம் எழுந்த நிலையில், ஸ்டாலின் சம்மதம் இல்லாமல் அழகிரி இப்படி வார்த்தையை விடுவாரா என்று பேச்சு வந்த நிலையில், ஸ்டாலின் தரப்பில் இருந்து என்ன ரிப்ளே வந்ததோ தெரியவில்லை. உடனே கே.எஸ்.அழகிரி, ‘’திமுக கூட்டணிக்கு கமலை அழைக்க வில்லை. வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொன்னேன். இது என்னோட தனிப்பட்ட கருத்து. திமுகவின் கருத்து அல்ல’’ என்று விளக்கம் கொடுத்தார். மேலும், ‘’கமல் தனித்து நின்றால் ஓட்டுக்கள் சிதறும். அதனால்தான் எங்கள் கூட்டணிக்குள் வரலாம் என்று சொன்னேன்’’என்றார்.

பி.கே. சொன்ன பாயிண்ட்… கமல் விவகாரத்தில் ஒதுங்கிக்கொண்ட ஸ்டாலின்!

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்குள் வரவேண்டும் என்று அழைத்தார்.

காங்கிரசார் இப்படி மாறி மாறி கமல்ஹாசனை அழைத்து வந்த நிலையில், ‘’காங்கிரசுடன் கூட்டணி பேச இது நேரமல்ல. கூட்டணி பேச இன்னும் நேரம் இருக்கிறது’’ என்று நழுவி இருக்கிறார் கமல்.

இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடுதான் என்ன என்பதை அறிய ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘’கமல்ஹாசனை காங்கிரஸ் அழைப்பது என்பது அவர்களோட தனிப்பட்ட கருத்து’’ என்று ஸ்டாலின் ஒதுங்கிக்கொண்டார்.

பி.கே. சொன்ன பாயிண்ட்… கமல் விவகாரத்தில் ஒதுங்கிக்கொண்ட ஸ்டாலின்!

கமல் விவகாரத்தில் ஸ்டாலின் ஏன் அப்படி ஒதுங்கிக்கொண்டார் என்று அறிவாலயம் தரப்பில் விசாரித்தபோது, பிரசாந்த் கிஷோர் சொன்ன ஒரு ’பாயிண்ட்’டாலதான் அவர் ஒதுங்கிக்கொண்டார் என்கிறார்கள்.

சீரமைப்போம் தமிழகத்தை என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்த கமல், தனது பயணங்களில் கூட்டம் அதிகமாக கூடுகிறது என்றும், தனதுகார் கப்பல் போல மிதந்துசெல்கிறது என்றும் பெருமிதம் கொண்டார். அதற்கு ஏற்ற வகையில் கமல் போகும் இடமெல்லாம் கூட்டமும் பெருந்திரளாக கூடியது.
ஆனால் இந்த கூட்டங்களுக்கு மக்களுக்கு ஆதரவு என்ன என்று பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு சர்வே எடுத்து பார்த்ததில் வெறும் 2 சதவீதம்தான் என்று தெரியவந்திருக்கிறது.

பி.கே. சொன்ன பாயிண்ட்… கமல் விவகாரத்தில் ஒதுங்கிக்கொண்ட ஸ்டாலின்!

இந்த ஒரு பாய்ண்ட்டை மட்டும் வைத்து கமல் விசயத்தில் ஸ்டாலின் ஒதுங்கிக் கொள்ளவில்லையாம்.. திமுகவுக்கு வருவதற்கு முன்பாக சில காலம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் வேலை பார்த்து வந்தது ஐபேக். அந்த வகையில், ம.நீ.ம. பலவீனங்களையும் பாயிண்ட் பாயிண்ட்டாக எடுத்து சொல்லி இருக்கிறார் பி.கே.

இதனால்தான் கமல் விவகாரத்தில் பெரிதும் விருப்பம் காட்டாமல், ‘’கமல்ஹாசனை காங்கிரஸ் அழைப்பது என்பது அவர்களோட தனிப்பட்ட கருத்து’’ என்று ஒதுங்கிக்கொண்டாராம் ஸ்டாலின்.