ஒரு ‘கை’ பார்த்தாரா ராகுல்?

 

ஒரு ‘கை’ பார்த்தாரா ராகுல்?

ஒரு கை பார்ப்போம் என்று தமிழகம் வந்த ராகுல்காந்தி ஒரு கை பார்த்துவிட்டாரா?

மூன்றுநாள் பயணமாக தமிழகம் வந்து ஐந்து மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவிட்டு நேற்று டெல்லி திரும்பியிருக்கிறார் ராகுல்காந்தி.

ஒரு ‘கை’ பார்த்தாரா ராகுல்?

ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆள முடியாவிட்டாலும் கூட்டணியில் இருந்து சட்டமன்றத்தில் தனது பங்களிப்பை செய்துவந்தது காங்கிரஸ். தற்போது அதற்கும் பங்கம் வந்துவிடுமோ என்கிற நிலை வந்துவிட்டது. காங்கிரசுக்கு தமிழகத்தில் செல்வாக்கு குறைந்துவிட்டது என்று சொல்லி சீட்டுகளை குறைத்துதான் கொடுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறது. ஒருகாலத்தில் தமிழகத்தினை ஆண்ட கட்சி, இருந்த செல்வாக்கை இழந்துவிட்டு நிற்கிறது என்றால், இன்னொரு பக்கம் பாஜக, வேல்யாத்திரை என்று தமிழக அரசியலில் தூள் பரத்திக்கொண்டிருந்தது.

ஒரு ‘கை’ பார்த்தாரா ராகுல்?

இந்த நேரத்தில்தான் ‘வாங்க, ஒரு கை பார்ப்போம்’ என்று களத்தில் இறங்கினார் ராகுல்காந்தி. ராகுல்காந்தியின் எளிமையும், இனிமையான அணுகுமுறையும் தமிழக மக்களை மிகவும் கவர்ந்துவிட்டது. ராஜீவ்காந்தியிடம் பார்த்த அதே எளிமை, அதே இனிமை என்று பலரையும் நெகிழவைத்தது. இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி மேல் தமிழர்களுக்கு இருந்த பிரியம் அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான் ராகுல்காந்தியின் வருகையையும் ரசித்தார்கள்.

ஒரு ‘கை’ பார்த்தாரா ராகுல்?

ராகுல்காந்தியும், ’’என் பாட்டி, என் தந்தைமீது தமிழக மக்கள் மிகப்பெரிய அன்பு வைத்திருந்தீர்கள். அதனால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவன் ஆகியிருக்கிறேன். உங்களுக்கு உழைக்கவும் ஆசைப்படுகிறேன்’’என்றார்.

’’தமிழக மக்களுடன் நான் கொண்டிருக்கும் அன்பு ,உணர்வு எல்லாம் மக்களுக்கு தெரியும். இது அரசியல் உறவு அல்ல. கொடுக்கல், வாங்கல் உறவும் அல்ல. இது நான் உங்களிடம் கொண்டிருப்பது குடும்ப உறவு’’என்றார்.

ஒரு ‘கை’ பார்த்தாரா ராகுல்?

காங்கிரசின் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத்தான் ராகுல்காந்தி தமிழகம் வந்தார் என்று அரசியல் நோக்கர்கள் கருதினாலும்,
’’நான் தமிழகம் வந்ததற்கு முக்கிய காரணமே, தமிழக மக்களின் உணர்வுகளையும், பண்பாட்டையும் புரிந்துகொண்டு நல்லதொரு ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகதான். அந்த அடிப்படையில்தான் நான் தமிழகம் வந்திருக்கிறேன்’’என்றார். அதனால்தானோ என்னவோ தெரியவில்லை, ’’என் மனதில் இருப்பதை பேசவில்லை. உங்கள் மனதிலிருப்பதை தெரிந்துகொள்ளவே வந்துள்ளேன்’’என்று சொன்னார் ராகுல்.

’’விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்கள், நெசவாளர்கள் ஆகியோருடன் பேசி அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளத்தான் நான் தமிழகம் வந்தேன்’’என்று சொன்னதுமாதிரியே அத்துனை பேரையும் சந்தித்து அவர்களின் விருப்பத்தினை அறிந்து, சிலரின் விருப்பத்தினை உடனே நிறைவேற்றியும் வைத்திருக்கிறார்.

ஒரு ‘கை’ பார்த்தாரா ராகுல்?

மற்றவர்களின் விருப்பமும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தரும் விதமாகத்தான், ‘’தமிழக மக்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் டெல்லியில் இருக்கிறேன். தமிழக மக்களை பாதுகாப்பதுதான் எனது வேலை’’என்று தெரிவித்துள்ளார் ராகுல் . ஆனாலும் தமிழக காங்கிரசாரையும் அவர் பாதுகாத்திருக்கிறார்.

ஒரு ‘கை’ பார்த்தாரா ராகுல்?

மூன்று நாள் பயணத்திலேயே காங்கிரஸை பலப்படுத்தியிருக்கும் ராகுல், இன்னும் அடுத்தடுத்த பயணங்களில் காங்கிரசுக்கு கூடுதல் தெம்பை கொடுத்துவிடுவார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ராகுல்காந்தியின் தமிழக பயணம் வெற்றிகரமாக அமைந்துவிட்டதை, சீட் பேரத்திற்கு சாதகமாக அமைந்துவிட்டதை திமுக உற்றுநோக்குகிறது.