சீமானை கிண்டல் செய்யவில்லை… விஜய் சேதுபதி விளக்கம்

 

சீமானை கிண்டல் செய்யவில்லை… விஜய் சேதுபதி விளக்கம்

விஜய்சேதுபதி – பார்த்திபன் நடித்திருக்கும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராசிமான் என்ற கேரக்டரில் பார்த்திபன் நடித்திருக்கிறார்.

சீமானை கிண்டல் செய்யவில்லை… விஜய் சேதுபதி விளக்கம்

அரசியல் தலைவராக அவர் நடித்திருக்கும் பாத்திரமும் பெயரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை நினைவுபடுத்துவதாக சர்ச்சை எழுந்தது. மேலும், ராசிமான் போஸ்டார்களை சிலர் கிழித்து எறிவது போன்ற டீசர் காட்சிகளால், சீமானின் போஸ்டர்களை கிழிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக நாம்தமிழர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தனர்.

சீமானை கிண்டல் செய்யவில்லை… விஜய் சேதுபதி விளக்கம்

இந்நிலையில் அந்த பிரச்சனைகுறித்து பேசிய விஜய்சேதுபதி, ’’அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புது எல்லாம் எங்கள் வேலை இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. படம் வந்தால்தானே தெரியும். அது என்ன மாதிரியான கதை என்று. நாங்கள் பிரச்சனையில் ஈடுபட வேண்டும் என்று படம் எடுப்பது இல்லை. மக்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்கிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

சீமானை கிண்டல் செய்யவில்லை… விஜய் சேதுபதி விளக்கம்