மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – மலை கிராமங்களுக்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – மலை கிராமங்களுக்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, முதுவாக்குடி, முந்தல், சிறைக்காடு, சோலையூர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்குதல், தார்ப்பாய், பிளாஸ்டிக் கூடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் STK.ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – மலை கிராமங்களுக்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

அப்போது பேசிய துணை முதலைமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக அரசு மக்களின் தேவை அறிந்து நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும், மீண்டும் அதிமுக அரசு அமைவதையே தமிழக மக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், முதுவாகுடி மலை கிராம மக்களுக்கு 61.49 லட்ச ரூபாய் மதிப்பிலா நலத்திட்டங்கள் அளிக்கப்பட்டன. சிறைக்காடு மக்களுக்கு 90 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டங்களும், சோலையூர் மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களும் அளிக்கப்பட்டன.

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – மலை கிராமங்களுக்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

குரங்கணி முதல் முதுவாகுடி வரை சாலை கல் பதிக்கும் பணிகளையும் துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் N.பிரீத்தா நடேசன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் பெ.திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.