காங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்

 

காங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்

கமல்ஹாசன் தங்களது கூட்டணிக்கு வரவேண்டும். இல்லையென்றால் ஓட்டுக்கள் வீணாக சிதறிவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தனர்.

காங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்

இந்நிலையில் இன்று அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’காங்கிரசுடன் கூட்டணி பேச இது நேரமல்ல..’’ என்று பதிலளித்தார் மக்கள் நீதி மய்யம் கமல்.

காங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற போதே, கடந்த 2019ம் ஆண்டில் கே.எஸ்.அழகிாி செய்தியாளா்களிடம் பேசியப்போது, நாட்டின் இறையாண்மையையும், மதச்சாா்பின்மையையும் காப்பாற்றுவது தான் எங்கள் கூட்டணியின் நோக்கம் என்றும், இதற்காக மதச்சாா்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன என்றும் தெரிவித்தவர், கூட்டணியில் உள்ள ஒருசில கட்சிகள் மகத்தான சாதனைகளை செய்துள்ளன. அதே போன்று ஒரு சில தவறுகளையும் கட்சிகள் செய்திருக்கலாம். அவற்றை பாா்க்க வேண்டிய நேரம் இது கிடையாது. கமல்ஹாசன் எங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும். எங்களோடு சோ்ந்து மதச்சாா்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போதும் கமல் தங்களது கூட்டணிக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். கார்த்தி சிதம்பரமும் வலியுறுத்தி வந்த நிலையில், காங்கிரசுடன் கூட்டணி பேச இது நேரமல்ல என்று தெரிவித்திருக்கிறார் கமல்.