தமிழக உறவு வேண்டாம் … ராகுலுக்கு தெரியாத வாழை இலை சம்பிரதாயம்

 

தமிழக உறவு வேண்டாம் … ராகுலுக்கு தெரியாத  வாழை இலை  சம்பிரதாயம்

‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்று ராகுல்காந்தியை தமிழகம் அழைத்து வந்து தீவிர பிரச்சார பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள். மேலும், ‘வாங்க, ஒருகை பார்ப்போம்’என்றும் பிரச்சாரத்தினை முன்னெடுத்து செல்கிறார் ராகுல்.

50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட காங்கிரசால் 50 ஆகியும் கூட மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பது கூட பரவாயில்லை. கேட்ட சீட் கொடுக்க கூட்டணி கட்சிகள் தயங்குகின்றன. இதனால் காங்கிரசை வலுப்படுத்த, ராகுல்காந்தியை தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய அழைத்து வந்துள்ளனர்.

தமிழக உறவு வேண்டாம் … ராகுலுக்கு தெரியாத  வாழை இலை  சம்பிரதாயம்

பிரச்சாரத்தின்போது தொழிலாளர்களுடனும்., விவசாயிகளுடனும் அமர்ந்து ராகுல் சாப்பிடுவது மாதிரி காங்கிரசார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பொங்கல் உணவினை பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் ராகுல். அதே போல் தற்போது மூன்று நாள் பயணமாக அவர் கோவை, கரூர், ஈரோடு, மாவட்டங்களில் பயணம் மேற் கொண்டிருக்கிறார். 23ம் தேதி கோவை வந்த ராகுல், இன்று தனது பிரச்சார பயணத்தினை நிறைவு செய்கிறார்.

தமிழக உறவு வேண்டாம் … ராகுலுக்கு தெரியாத  வாழை இலை  சம்பிரதாயம்

நேற்றைய பிரச்சாரத்தின்போது, ஈரோடு ஓடாநிலையில் நெசவாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர், மதியம் நெசவாளர்களூடன் அமர்ந்து வாலை இலையில் சாப்பிட்டார் ராகுல்.

சாப்பிட்டு முடித்ததும் அவர் இலையை மேலிருந்து கீழ்நோக்கி மூடுவது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

வாலை இழையின் நுனிப்பகுதி இடது பக்கமாகவும், இழையின் அடிப்பகுதி வலது பக்கமாகவும் இருக்கும் படி செய்ய வேண்டும். ஆனால், ராகுலுக்கும் அப்படித்தான் முறைப்படி இழை போட்டிருந்தார்கள்.

சாப்பிட்ட பின்னர் இலையை மேலிருந்து கீழ்நோக்கி மூடினால், அந்த உறவு வேண்டும் என்று அர்த்தம். மீண்டும் வருவேன் என்பதாகவும் அர்த்தம். அதுவே கீழிருந்து மேல் நோக்கி மூடினால் அந்த உறவு வேண்டாம் என்றும், மீண்டும் வரமாட்டேன் என்றும் சொல்வதாகவும் அர்த்தம்.

தமிழக உறவு வேண்டாம் … ராகுலுக்கு தெரியாத  வாழை இலை  சம்பிரதாயம்

சுப நிகழ்ச்சிகளில் சாப்பிடுவோர் மீண்டும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டுமென்பதால் மேலிருந்து கீழாக இலையை மூடுவர். அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று சாப்பிடும்போது மீண்டும் இது போன்ற நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்று கீழிருந்து மேல் நோக்கி மூடுவர்.

தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு என்று சொல்லும் ராகுலுக்கு வாழை இலையில் இருக்கும் சம்பிரதாயம் தெரிந்திருந்தால் உறவு வேண்டாம் என்று எப்படி சொல்லுவார் ராகுல். நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன் என்று பிரச்சாரத்தில் சொல்லி வருகிறார் ராகுல். அப்படிப்பட்டவருக்கு இலையை எப்படி மூடுவது என்ற தமிழர்மரபு தெரிந்திருந்தால் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அந்த வீடியோவை பார்த்துவிட்டு, தமிழர் உறவு வேண்டாமா ராகுல்? என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.