206 ரன்கள் – பஞ்சாப் டீம் அசத்தல் ஸ்கோர் – சதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல்

206 ரன்கள் – பஞ்சாப் டீம் அசத்தல் ஸ்கோர் – சதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல்

ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொன்றுமே கடைசி ஓவர் வரை… சில போட்டிகள் கடைசி பந்து வரையே பரபரப்பாகவே செல்கிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸைப் பந்தாடியது ரோஹித் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ்.

இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வென்ற பெங்களூரு அடுத்த வெற்றிக்காகக் களம் இறங்குகிறது.

206 ரன்கள் – பஞ்சாப் டீம் அசத்தல் ஸ்கோர் – சதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல்

இன்று டாஸ் வின் பண்ணிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

கே.எல்.ராகுல் மற்றும் மயங் அகர்வால் ஓப்பனிங் இறங்கினர். கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி 132 ரன்கள் அடித்தார்.ஓப்பனிங் இறங்கிய கே.எல் ராகுல் தனது ஐபிஎல் மொத்த ரன்களில் 2000 யை எட்டினார்.

206 ரன்கள் – பஞ்சாப் டீம் அசத்தல் ஸ்கோர் – சதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல்

69 பந்துகளில் 7 சிக்ஸர்களும் 14 ஃபோர்களுடன் 132 ரன்கள் விளாசினார் கே.எல்.ராகுல். ஐபிஎல் 2020 தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவே. கேப்டனாகி ராகுல் அடித்த முதல் சதமும் இதே.  ஓப்பனிங் இறங்கிய ராகுல் 20 ஓவர் முடிய அவுட்டாகமல் இருந்தார். பூரன், மேக்ஸ்வெல் இந்தப் போட்டியிலும் பெரிதாக சோபிக்க வில்லை. மயங்க 26, பூரன் 17,கருண் நயர் 15, மேக்ஸ்வெல் 5 ரன்களும் எடுத்தனர்.

206 ரன்கள் – பஞ்சாப் டீம் அசத்தல் ஸ்கோர் – சதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல்

பெங்களூரு பவுலிங் தரப்பில் ஷிவம் டுபே 2, சஹல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஸ்டெயின் 4 ஓவர் வீசி 57 ரன்களை விட்டுக்கொடுத்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2 ஓவர் வீசி 13 ரன்கள் கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்க வில்லை.

206 ரன்கள் – பஞ்சாப் டீம் அசத்தல் ஸ்கோர் – சதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல்

பெங்களூரு அணிக்கு 207 ரன்கள் இலக்காக வைத்திருக்கிறது பஞ்சாப்