விடுதலையானதும் விளார் கிராமத்திற்கு செல்லும் சசிகலா!

 

விடுதலையானதும் விளார் கிராமத்திற்கு செல்லும் சசிகலா!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை தேறியதை தொடர்ந்து அவர் சாதாரண வாடுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

விடுதலையானதும் விளார் கிராமத்திற்கு செல்லும் சசிகலா!

தண்டனையின்படி சசிகலா நாளை மறுதினம் விடுதலையாகிறார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் தற்போது அவர் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இம்மாதத்தின் இறுதியிலேயே அவர் தமிழகம் திரும்பிவிட விரும்பினாலும், மருத்துவர்களின் அறிவுறுத்தலினால் பிப்ரவரி முதல் வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகி தமிழகம் திரும்பலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

விடுதலையானதும் விளார் கிராமத்திற்கு செல்லும் சசிகலா!

பிப்ரவரி மூன்றாம் தேதி பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினம் என்பதால் அன்றைய தினம் டிஸ்சார்ஜ் ஆகி தமிழகம் வந்து அண்ணா நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அதன் பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யச்சொல்லி இருக்கிறார்.

பின்னர் தஞ்சாவூர் அருகே இருக்கும் விளார் கிராமத்திற்கு சென்று, தனது கணவர் ம.நடராஜன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவும் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள் மன்னார்குடி அதிமுக நிர்வாகிகள்.