Home அரசியல் ஸ்டாலினை வேல் ஏந்த வைத்துள்ளது இந்து எழுச்சியின் வெற்றிக்கு ஆதாரம்... எச்.ராஜா

ஸ்டாலினை வேல் ஏந்த வைத்துள்ளது இந்து எழுச்சியின் வெற்றிக்கு ஆதாரம்… எச்.ராஜா

இந்துக்களின் ஓட்டு வேண்டுமென்றால் கோயில் வாசலில் நின்று பஜனை பாட கூட தயங்கமாட்டான் பகுத்தறிவு திராவிடன் என்று பத்திரிகையாளர் சோ சொன்னது உண்மையாகிறது. திருத்தணியில் கையில் வேலுடன் நின்று ஸ்டாலின் போஸ் கொடுத்தை பார்த்தபோது சோ சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது என்று பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்துவிட்டு நெற்றியில் விபூதி பூசினர். ஸ்டாலின் அந்த விபூதியை உடனே அளித்து விட்டார். அதனால் அப்போது அது பெரும் சர்ச்சையானது. இதன் பின்னர் பசும்பொன் தேவர் குரு பூஜையில் பூசாரி அளித்த விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருத்தணியில் தொண்டர்கள், நிர்வாகிகள் சார்பில் கொடுத்த வேலினை கையிலேந்தி போஸ் கொடுத்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தேர்தல் வந்துவிட்டதால் ஓட்டுகளை பெறுவதற்காக இப்படி செய்கிறார் ஸ்டாலின் என்று பாஜகவினர் கடுமையாக சாடி வருகிறார்கள். திமுக தலைவராக இருந்த கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்றும், நெற்றியில் குங்குமம் வைத்து இருப்போரை பார்த்து , நெற்றியில் என்ன ரத்தம் என கிண்டல் அடிப்பது உண்டு. அவரது வாரிசான ஸ்டாலின் திருமண விழாவில் நடக்கும் இந்து மத சடங்குகளை கிண்டல் அடிப்பார். இந்துமத விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோயில் கோயிலாக சென்று குலதெய்வ கோயிலுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்கள். அது திமுகவின் இரட்டை வேடம் என்றால் வேல், வேலுடன் போஸ் கொடுக்கும் ஸ்டாலின் செயல் தேர்தல் நாடகம் என்று பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவும் அதையே தெரிவித்திருக்கிறார். அவர், ‘’இந்து என்றால் திருடன் என்று சொன்ன இந்து விரோதி கருணாநிதியின் மகனும் இந்து பண்டிகைகளுக்கு இன்றுவரை வாழ்த்து சொல்ல மறுக்கும் அசல் இந்து விரோதி ஸ்டாலினை வேல் ஏந்த வைத்துள்ளது இந்து எழுச்சியின் வெற்றிக்கு ஆதாரம். ஆனால் கந்தனை இழிவு செய்த கருப்பர் கூட்ட திமுகவை தோற்கடிப்போம்’’என்று தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்… டைம்ஸ்நவ் சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவு

டைம்ஸ் நவ் சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் இறுதி முடிவுக்கும், வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரு கருத்துக்கணிப்புகளையும் அந்நிறுவனங்கள் வெளியிடும். கிட்டத்தட்ட அவற்றின் கருத்துக்கணிப்பின்படியே...

சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கும் சின்னம்மா பேரவை அமைப்பினர்!

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அறிக்கை என சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின்...

மேற்கு வங்கத்தில் அடுத்த திருப்பம்.. பா.ஜ.க.வுக்கு தாவிய 5 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வரும்...

நான் மரு வச்ச துரைமுருகன்! நீதிமன்றத்தையே குழம்ப வைத்த திமுகவினர்!

.பழைய திரைப்படங்களில் மாறுவேடம் என்பதற்கு ஒரு சிறிய மருவை மட்டும் ஒட்டினால் போதும் என்பது போன்ற ஏமாற்று வேலைகளை பார்த்திருப்போம். அது போன்ற ஒரு சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது.
TopTamilNews