பிரச்சார கூட்டத்தில் அழுத குழந்தையை தூக்கி சமாதானப்படுத்திய முதல்வர்!

பிரச்சார கூட்டத்தில் அழுத குழந்தையை தூக்கி சமாதானப்படுத்திய முதல்வர்!

பொதுவாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பயணங்களின் மீது தனக்காக சாலையோரம் நிற்போரையும் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, நிவர்த்தியும் செய்து வருகிறார். தூத்துக்குடியில் வேலை வாய்ப்புக்காக கையில் மனுவுடன் சாலையோரத்தில் நின்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனே வேலை போட்டு கொடுத்தார் முதல்வர். அதே மாதிரி கடலூர் சென்றுவிட்டு திரும்பும்போது சாலையில் நின்றிருந்த மணமக்களை காரை விட்டே இறங்கி, செருப்புகளை கழற்றிவைத்துவிட்டு வாழ்த்தினார் முதல்வர்.

பிரச்சார கூட்டத்தில் அழுத குழந்தையை தூக்கி சமாதானப்படுத்திய முதல்வர்!

சாலையோரம் நிற்கும் சிறுவர்களை அழைத்து இனிப்புகள் வழங்கியும் மகிழ்பவர் முதல்வர்.

இந்நிலையில், பிரச்சார கூட்டத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையை வாங்கி, அந்த குழந்தையை சமாதானப்படுத்தி, பின்னர் தனக்கு வழங்கப்பட்ட சால்வையை அந்த குழந்தையின் மேல் போர்த்தி, பெற்றோரிடம் ஒப்படைத்தை கண்டு கூடியிருந்த திரளான பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.

பிரச்சார கூட்டத்தில் அழுத குழந்தையை தூக்கி சமாதானப்படுத்திய முதல்வர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியகுளம் விநாயகர் கோவில் அருகில் பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றினார்.

அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னூர் சந்திப்பில் பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றினார். பெரியநாயக்கன் பாளையத்தில் மாநாடு போல் பெருந்திரளாக கூடியிருந்த பொது மக்களிடையேயும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு ரொட்டி கடையில் பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையேயும் உரையாடினார்.

பிரச்சார கூட்டத்தில் அழுத குழந்தையை தூக்கி சமாதானப்படுத்திய முதல்வர்!

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே முதல்வர் உரையாடினார்.

பிரச்சார கூட்டத்தில் அழுத குழந்தையை தூக்கி சமாதானப்படுத்திய முதல்வர்!

இந்த தீவிர பிரச்சாரத்திற்கு இடையிலும், பிரச்சார கூட்டத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கி, அந்த குழந்தையை சமாதானப்படுத்தி, பின்னர் தனக்கு வழங்கப்பட்ட சால்வையை அந்த குழந்தையின் மேல் போர்த்தி, பெற்றோரிடம் ஒப்படைத்தை கண்டு கூடியிருந்த திரளான பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.